திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில், இன்று நடைபெற்ற நூல்வெளியீடு விழாவில், மாற்று நோபல் பரிசு வென்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், மூத்த எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்றனர்.

இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், லாரா கோப்பாவின் சுந்திரத்தின் நிறம், பாலசுப்ரமணியம் முத்துசாமியின், இன்றைய காந்திகள் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. பொன்னுத்தாய் அம்மா காந்திஜி பள்ளிக்கூடத்திற்கு, 'முகம் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Book release function held in Dindugal

தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி மற்றும் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். இவரும், இவரின் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போராடினர். உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும்,சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இவர் தன் கணவருடன் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டார். தன்னுடைய உயரிய சேவைக்காக 2008ல் Right Livelihood Award விருதைப்பெற்றார். இது மாற்று நோபல் பரிசு எனப்புகழப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Book release function held in Dindugal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X