திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மரியாதையா பேசுங்கள்.. இல்லாட்டி காது சவ்வு கிழிந்துவிடும்.. ஸ்டாலினுக்கு முதல்வர் வார்னிங்!

Google Oneindia Tamil News

ஒட்டன்சத்திரம்: மரியாதை கொடுத்து பேசுங்கள். நான் திருப்பி பேசினால் உங்கள் காது சவ்வு கிழிந்து விடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்தார்.

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒட்டன்சத்திரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார்.

அப்போது முதல்வர் பேசுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்படுகிறார். தந்தையின் ஆதரவின் அடிப்படையில் அரசியலுக்கு கொல்லைப்புறமாக ஸ்டாலின் உள்ளே வந்தார்.

கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காது சவ்வு கிழிந்துவிடும்

காது சவ்வு கிழிந்துவிடும்

ஆனால் நான் உழைத்து பதவிக்கு வந்தேன். சாதாரண தொண்டன் முதல்வரானால் அதை கேவலமாக பேசுவதா. மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நான் திருப்பி பேசினால் காது சவ்வு கிழிந்துவிடும்.

திட்டங்கள்

திட்டங்கள்

அரசியலில் என்னுடன் நேருக்கு நேர் மோதுங்கள். நான் அதற்கு உண்டான பதில்களை கூறுகிறேன். நாங்கள் மக்களை சந்தித்து இந்த திட்டங்களை செய்கிறோம், அதை செய்கிறோம் என சொல்கிறோம்.

முதல்வரை திட்டுவது

முதல்வரை திட்டுவது

ஆனால் ஸ்டாலினோ பொதுக் கூட்டத்துக்கு போனாலே பிரதமரை திட்டுவது, என்னை திட்டுவது, எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வது இதுதான் என்றார் முதல்வர்.

தலைவர்

தலைவர்

பின்னர் இதைத் தொடர்ந்து முதல்வர் பேசுகையில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் காவிரி-கோதாவரி நீர் இணைப்பு திட்டத்துக்காக முதலில் குரல் எழுப்புவோம். சென்னையில் உணவுப் பூங்கா அமைப்பதால் ஒவ்வொரு மாவட்ட விவசாயிகளும் பலன் பெறுவார்கள். ஸ்டாலின் ஒரு தலைவராக இருந்து நல்ல வார்த்தைகளை பேசுவதில்லை என்றார்.

English summary
CM Edappadi Palanisamy warns MK Stalin that he should talk respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X