திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிக்கிற மழைக்கு சென்னையே கொடைக்கானலாயிடுச்சு.. அப்ப கொடைக்கானலோட நிலை.. செம குளிராமே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Maha : அரபிக் கடலில் இன்னொரு புயல் உருவானது... பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    திண்டுக்கல்: கொடைக்கானலில் மீண்டும் காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியதால் அங்கு மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானலில் கடந்த 20 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. ஏரியும், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கமும் நிரம்பி மறுகால் வழிந்தது.

    இந்நிலையில் கடந்த 4-நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அதிகாலை முதலே மேகமூட்டம் நிறைந்து மழை பெய்தது. தொடர்ந்து பலத்த காற்று வீசியது.

     அரபிக் கடலில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கன மழை. பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அரபிக் கடலில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கன மழை. பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

    பள்ளி குழந்தைகள்

    பள்ளி குழந்தைகள்

    அதிகாலை முதல் விட்டு விட்டு மழையும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த மழையால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அன்றாட பணிகளுக்கும் செல்லும் பொது மக்களும் பாதிப்படைந்தனர்.

    திண்டுக்கல்லிற்கு ரெட் அலர்ட்

    திண்டுக்கல்லிற்கு ரெட் அலர்ட்

    கடந்த சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது . இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையாக இருப்பதால் கணிசமாக சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்பட்டது.

    தண்ணீர் தேக்கம்

    தண்ணீர் தேக்கம்

    ஆனால் மழையின் காரணமாக சுற்றுலா இடங்களை பார்ப்பதில் பயணிகள் சிரமப்பட்டனர். படகு சவாரி இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர் மழையின் காரணமாக ஏரி சாலைப் பகுதிகளில் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.

    குளிர்

    குளிர்

    இதனால் அப்பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் குளிர் அதிகமாக காணப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    English summary
    Cold temperature in Kodaikkanal as it gets heavy rainfall. Water bodies are filled.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X