திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொழில் அதிபர்கள் வீடுகளில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ‘திடீர் விசிட்’.. பரபரத்த பழனி.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், முக்கியமான தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளுக்கு திடீரென வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

Recommended Video

    தொழில் அதிபர்கள் வீடுகளில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ‘திடீர் விசிட்’.. பரபரத்த பழனி.. பின்னணி என்ன?

    பழனியில் உள்ள முக்கிய நகைக்கடை அதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டிங் காண்ட்ராக்டர்கள் உள்ளிட்ட சிலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சேவை மற்றும் சரக்கு, மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். இதனையடுத்து வரிஏய்ப்பு தொடர்பான சோதனை நடப்பதாக தகவல் பரவியது.

     Customs officials raid in business persons house in palani

    இதனையடுத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 25 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் ஆகியோர் செலுத்தக்கூடிய ஜிஎஸ்டி வரியானது முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து, கட்டுமான நிறுவனங்களுக்கான வரி 12சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தபட்டுள்ள நிலையில் வரி செலுத்துவதில் தவறு செய்தால் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்‌ குறித்தும் அறிவுறுத்தவே வந்ததாகவும், எப்போதும் தொழிலதிபர்களை நேரில் அழைத்து அறிவுறுத்தப்படும் நிலையில் தற்போது அதிகாரிகளே நேரில் வந்து அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் இது வழக்கமான நடைமுறைதான் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சமீபத்தில், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பழனி அருகே ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், மீண்டும் சோதனை என தகவல் பரவியதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

    எதே மாட்டு கறி இல்லையா? சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் உணவு திருவிழா! பரபரப்பை கிளப்பிய பஞ்சாயத்து!எதே மாட்டு கறி இல்லையா? சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் உணவு திருவிழா! பரபரப்பை கிளப்பிய பஞ்சாயத்து!

    English summary
    The sudden visit of Central Excise and Customs officials to the contractors and Business people houses in Palani has created a stir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X