திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்னப் பசங்கள விட்டு.. ஹெல்மெட் போடாதவர்களுக்கு திண்டுக்கல் போலீஸ் கொடுத்த ஷாக் ட்ரீட்!

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெல்மெட் போடலனா ரூ.1000 அபராதம்: எச்சரிக்கை விடுத்த ஷியாமளாதேவி!

    திண்டுக்கல்: இதைவிட ஒரு அசிங்கம், வெட்கம் இவங்களுக்கு கிடைக்காது.. ஹெல்மெட் போடாதவர்களுக்கு திண்டுக்கல் போலீசார் அப்படி ஒரு தண்டனையை தந்திருக்கிறார்கள்!

    ஹெல்மெட் போடுங்க.. ஹெல்மெட் போடுங்க..என்று தமிழகம் முழுவதும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக எத்தனையோ வகைகளில், எத்தனையோ தினுசாக சொல்லி சொல்லி பார்க்கிறார்கள்.. அப்படியும் சிலர் ஹெல்மெட் போடாமல்தான் வண்டி ஓட்டி வருகிறார்கள்.

    Different punishment for without wearing helmet in Dindigul

    சிலர் வண்டியில் ஹெல்மெட் இருந்தாலும் அதை எடுத்து தலையில் மாட்டுவது இல்லை. போலீசார் தூரத்தில் தெரிந்தால் எடுத்து டக்கென எடுத்து மாட்டி கொள்கிறார்கள். அதையும் மீறி சிக்குபவர்களுக்கு போலீசார் ஸ்பாட்டிலேயே பைன் போடுகிறார்கள்.

    திமுகவுக்கு வருகிறது செக்.. 2 காவல் அதிகாரிகளை வைத்து.. அதிமுக தீட்டும் அதிரடி திட்டம்! திமுகவுக்கு வருகிறது செக்.. 2 காவல் அதிகாரிகளை வைத்து.. அதிமுக தீட்டும் அதிரடி திட்டம்!

    இன்றுகூட திண்டுக்கல் - திருச்சி சாலையில் டிஎஸ்பி தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது ஹெல்மெட் போடாமல் வந்தவர்கள் சிலர் சிக்கினர். அவர்களுக்கு ஸ்பாட் பைன் எல்லாம் போடவில்லை. மாறாக, சின்ன பசங்களை கூப்பிட்டு அறிவுரை சொல்ல சொன்னார்கள்.

    தன்னை விட வயசு குறைந்த சிறுவர்கள் அட்வைஸ் பண்ணாலாவது இனி ஹெல்மெட் போடுவார்கள் என்பதாலேயே இப்படி செய்தார்கள். இது மட்டுமில்லை.. தற்காலிகமாக தயார் செய்து வைக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து சுற்றி வர வேண்டும் என்றும் போலீசார் சொன்னார்கள்.

    சிறுவர்கள் அட்வைஸ் பண்ண, பண்ண சிலருக்கு வெட்கமாக போய்விட்டது. இனி கண்டிப்பா ஹெல்மெட் போடுவோம் என்று உறுதி தந்துவிட்டு, வாகன ஓட்டிகள் வெட்கப்பட்டு கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

    English summary
    Dindigul Traffic Police have given new method punishment for without wearing helmet people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X