ஆற்றில் மூழ்கி 4பேர் சாவு.. போஸ்ட் மார்ட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கொடுமை.. ஷாக்கில் திண்டுக்கல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆற்றில் நீச்சல் பழக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் திண்டுக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,
இந்நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஊழியர்கள் 12 ஆயிரம் லஞ்சம் வாங்கியதுடன் கூடுதலாக10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் செய்தனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்றுப் படுகைகளில் கடந்த காலங்களில் அதிக அளவு மணல் அள்ளிய காரணத்தால் பல இடங்களில் பள்ளம் உருவாகி உள்ளது. திண்டுக்கல் ஆர்விஎஸ் பாறைப் பட்டி பகுதியில் சந்தன வர்தினி ஆறு உள்ளது இந்த ஆற்றில் மணல் திருடர்களால் தோண்டப்பட்ட குழி உள்ளது.
ஆத்தாடி.. விட்டா அண்ணாவுக்கே ஆலோசனை சொன்னேன்னு சொல்வார் சசிகலா.. கலாய்க்கும் ஜெயக்குமார்!

4 பேர் பலி
இன்று பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி சக்திவேல் அவரது மனைவி சக்திவேலின் உறவினர் மகள்கள் சத்யா பாரதி. ஐஸ்வர்யா ஆகியோருடன் நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர் இந்நிலையில் ஒரு மாணவி ஆற்றின் மணல் குழியில் மாற்றியுள்ளார் அவரை காப்பாற்ற அடுத்தடுத்த நபர்கள் உள்ளே இறங்கியது நான்கு பேரும் மணல் குழியில் மாற்றி துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளனர்

லஞ்சம் கேட்டனர்
இதனையடுத்து இறந்தவர்கள் உடல் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது.இதற்கிடையில் 4பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து கொடுக்க மருத்துவமனை ஊழியர்கள் 12ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் வேதனை
இதனையடுத்து அந்த பணத்தை இறந்தவரின் தந்தை கொடுத்துள்ளாராம். மேலும் 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கேட்டு ஊழியர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த வேதனை அடைந்தார்.

பரபரப்பு
தகவலை கேட்டு கொதித்துப் போன உறவினர்கள், ஒன்று திரண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் அமைதி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 உறவுகளை இழந்து தவித்த குடும்பத்தினரிடம் போஸ்ட் மாட்டத்திற்கு லஞ்சம் கேட்ட சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.