திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: பட்டப்பகலில் தலை துண்டிக்கப்பட்டு நிர்மலா தேவி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக 3 போரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்

இந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரைப் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.

படுகொலை

படுகொலை

இவர்களில் முத்துபாண்டி, புறா மாடசாமி உள்ளிட்ட நான்கு பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி காலணியைச் சேர்ந்த நிர்மலா தேவி என்பவர் மர்ம நபர்களால் புதன்கிழமை காலை படுகொலை செய்யப்பட்டார்.

யார் இந்த நிர்மலா தேவி

யார் இந்த நிர்மலா தேவி

திண்டுக்கல் இ.பி காலணி பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று கொண்டிருந்த நிர்மலா தேவியை, மர்ம நபர்கள் தலையைத் துண்டித்து நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். 9 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனிடம் செல்போனில் பேசி, அவரை வீட்டைவிட்டு வெளியே வரவழைத்தது, மற்றும் அவரை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது எனப் பசுபதி பாண்டியன் கொலைக்கு நிர்மலா தேவி உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

பழிக்குப் பழி

பழிக்குப் பழி

பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டு 9 ஆண்டுகள் கழித்து, அதற்குப் பழிவாங்கும் வகையில் பட்டப்பகலில் நிர்மலா தேவி கொலை செய்து, தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பவம் தொடர்பாகக் கொலை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி சீனிவாசன், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

3 பேர் கைது

3 பேர் கைது

இந்நிலையில், நிர்மலா தேவி கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார்(21), தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் திண்டுக்கல் அடுத்துள்ள கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த பெ.நடராஜன்(45), செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன்(21) ஆகிய மூவர் தாடிக்கொம்பு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

English summary
Nirmala Devi murder latest update. Dindigul latest crime news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X