திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க ஓட்டு ஆப்பிளுக்கே.. இல்லை மாம்பழத்துக்கே.. மண்டையில் அடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட போது வாய் தவறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

சிரி, சிரிச்சுட்டே இரு.. உம்முன்னு இருக்காதே.. மகனுக்கு ப.சிதம்பரம் கொடுத்த செம டிப்ஸ் சிரி, சிரிச்சுட்டே இரு.. உம்முன்னு இருக்காதே.. மகனுக்கு ப.சிதம்பரம் கொடுத்த செம டிப்ஸ்

ஜோதிமுத்து

ஜோதிமுத்து

அமைச்சரின் சொந்த தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டிய பதற்றம் திண்டுக்கல் சீனிவாசனிடம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்தார்.

ஆப்பிள் சின்னம்

ஆப்பிள் சின்னம்

அப்போது அவர் அதிமுக கூட்டணி குறித்தும் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகள் குறித்தும் விளக்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் உங்கள் ஓட்டு மாம்பழ சின்னத்துக்கே என கூறுவதற்கு பதிலாக உங்கள் ஓட்டு ஆப்பிள் சின்னத்திற்கே என கூறினார்.

சலசலப்பு

சலசலப்பு

இதனால் வேட்பாளரே அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கூட்டத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் சுதாரித்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் தனது தவறை திருத்திக் கொண்டார்.

மோடி பேரன் ராகுல்

மோடி பேரன் ராகுல்

இதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல்லில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பக்கம் போட்டியிடுகிறார். மோடியின் பேரன் ராகுல் காந்தி இன்னொரு பக்கம் போட்டியிடுகிறார் என்று கூறி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார்.

English summary
Minister Dindigul Srinivasan asks vote for Apple symbol instead of Mango.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X