திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நரேந்திர மோடியின் பேரன் ராகுல்காந்தி".. வழக்கம் போல் உளறிக் கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    'நரேந்திர மோடியின் பேரன் ராகுல்காந்தி' - திண்டுக்கல் சீனிவாசன்- வீடியோ

    திண்டுக்கல்: இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி என்பதற்கு பதிலாக மோடியின் பேரன் ராகுல் காந்தி இந்த தேர்தலில் போட்டியிடுவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் உளறிக் கொட்டினார்.

    திண்டுக்கல் லோக்சபா தொகுதி பாமகவுக்கு அறிவித்ததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் அந்த தொகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

    அந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதில் கூட்டணி கட்சியினர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர். வந்தது முதல் தூங்கி வழிந்து கொண்டிருந்தார் திண்டுக்கல் சீனிவாசன்.

    இந்திய மக்களிடம் சிரிப்பு இருக்கு... ஆனா, சந்தோசம் இல்லை... ஐ.நா தகவல் இந்திய மக்களிடம் சிரிப்பு இருக்கு... ஆனா, சந்தோசம் இல்லை... ஐ.நா தகவல்

    நரேந்திர மோடி பேச்சு

    நரேந்திர மோடி பேச்சு

    இதையடுத்து ஒரு வழியாக அவரை பேசுமாறு அழைத்தனர். அப்போது திடீரென பதறிய அமைச்சர் மைக்கை பிடித்தார். உடனே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடியும் போட்டியிடுகிறார்.

    பாமகவுக்கு விட்டுட்டீங்களே

    பாமகவுக்கு விட்டுட்டீங்களே

    அவரது பேரனான ராகுல்காந்தியும் போட்டியிடுகிறார். இரு துருவங்களுக்கு இடையே இந்திய நாடு முழுவதும் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக கோட்டை திண்டுக்கல். அதைப் போய் பாமகவுக்கு விட்டுவிட்டீர்களே என கட்சியினர் பேசுகிறார்கள்.

    திமுக தயார்

    திமுக தயார்

    தொகுதி பங்கீட்டுக்கு பிறகு அதிமுகவின் கோட்டை திண்டுக்கல்லை ஏன் பாமகவுக்கு ஒதுக்கினீர்கள் என 3 நாட்களாக எனக்கு போன் போட்டு நிர்வாகிகள் தொல்லை செய்து விட்டனர். கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதற்கு திமுக தயார் என்று சொன்னால் நாமும் தயார்.

    ஜெயலலிதா பெற்ற வெற்றி

    ஜெயலலிதா பெற்ற வெற்றி

    நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நின்று 38 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா நிரூபித்துவிட்டார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கிற சூழலில் சூழ்ச்சியால் வெற்றி பெற்று விடுவார்கள் என்று தெரிந்து தான் கூட்டணி அமைத்தோம்.

    சமயோஜித புத்தி

    சமயோஜித புத்தி

    இப்போதும் நாம் தனித்து நிற்க முடியும். சமயோஜித புத்தி எது என்று யோசித்தால் கூட்டணி தான் சிறந்தது என்று சொல்கிறது. அதனால் தான் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம் என்றார் வனத்துறை அமைச்சர் சீனிவாசன்.

    English summary
    Minister Dindigul Srinivasan says that Rahul Gandhi is grand son of Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X