திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேஷன் கடை டூ டாஸ்மாக்.. 2500 ரூபா எப்படியும் அரசு கஜானாவுக்கு வந்துடும்.. திண்டுக்கல்லார் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: அரசாங்கத்தின் பணம் அரசாங்கத்திற்கே வந்து சேரும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுவதும் முதல்வரால் துவக்கப்பட்ட முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் திட்டமும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் துவக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பை பற்றி பகுதியில் நேற்று மாலை முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டது.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

இந்த துவக்க விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினார். அப்போது தற்போது தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2500 ரூபாய் பொங்கல் பரிசாக நாளை வழங்கப்படும் என்றார்.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

அப்போது அந்த கூட்டத்தில் குடிக்காரர் ஒருவர் தனக்கு அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன் இன்னும் கிடைக்கவில்லை என முறையிட்டார். அப்போது அமைச்சர் கூறுகையில் அரசாங்கம் கொடுக்கும் பணம் எங்கேயும் போகாது. இவர்கள் மூலம் மீண்டும் அரசாங்கத்திற்கே வரும். ரூ 2500 ஐ எடுத்துக் கொண்டு டாஸ்மாக்கிற்கு சென்றால் அது அரசாங்கத்திற்குத்தானே வருகிறது?

டாஸ்மாக்

டாஸ்மாக்

இவர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தால் மீண்டும் அதை டாஸ்மாக் வழியாக அரசாங்கம் கஜானாவுக்கு வந்துவிடும். அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை தாய்மார்கள் எடுத்துக் கொள்வார்கள் என கூறினார். அப்போது சுற்றியிருந்தவர்கள் அனைவரும் சிரித்து கை தட்டினர்.

Recommended Video

    திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்னதான் ஆச்சு..? குழப்பத்தில் அதிமுகவினர்..!
    இயேசுவை சுட்டது கோட்சே

    இயேசுவை சுட்டது கோட்சே

    தொடர்ந்து இந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மேடைகளில் பேசி வருகிறார் முதலில் இயேசுவை சுட்டது கோட்சே என்று கூறினார் அடுத்ததாக திருக்குறளை எழுதியது அவ்வையார் என்ற மிகப்பெரிய சர்ச்சையை இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    கஜானாவுக்கு செல்லும்

    கஜானாவுக்கு செல்லும்

    தற்போது தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு வீணாக செல்லாது மீண்டும் அரசு கஜானாவுக்கு டாஸ்மார்க் மூலமாக வரும் என்று பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையாக பேசியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பூரண மதுவிலக்கை கோரும் நிலையில் மதுகுடிப்பதை ஒரு அமைச்சரே நியாயப்படுகிறாரே என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    English summary
    Minister Dindigul Srinivasan says that Pongal gift 2500 will be again coming to Government Treasury through Tasmac.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X