திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொத்த திண்டுக்கல்லையும்.. ஒத்த வார்த்தையால் "பூட்டி" விட்ட சீனிவாசன்.. என்னா பேச்சு.. பயங்கரம்!

திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சையாக பேசி உள்ளார்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ஒட்டுமொத்த திண்டுக்கல்லும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது.. ஏன் தெரியுமா? எல்லாத்துக்கும் காரணம் நம்ம திண்டுக்கல் சீனிவாசன்தான்!

Recommended Video

    திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்னதான் ஆச்சு..? குழப்பத்தில் அதிமுகவினர்..!

    யானை நின்றாலும் ஆயிரம் பொன், படுத்தாலும் ஆயிரம் பொன் என்று சொன்னதைகூட ஏற்கலாம்.. மத்தியில் இப்போது பிரதமராக இருப்பது நரசிம்மராவ் என்றதை கூட ஏற்கலாம்.. இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு என்பதைகூட ஏற்கலாம்.

     Dindigul Srinivasans Controversy Speech about Neet Exam

    "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், கூரை ஏறி வைகுண்டத்திற்கு போன மாதிரி" என்பதையும் கூட ஏற்கலாம்.. திருக்குறளை எழுதியது ஔவையார் என்பதைதான் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை.. குழந்தைகளை கேட்டாலும் டக்கென சொல்லக்கூடிய பதிலை, ஒரு அமைச்சர் தப்பாக சொல்வதை ஏற்கவே முடியவில்லை.. என்னதான் வெள்ளந்தியாக பேசினாலும், வரலாற்றையே திரித்து பேசக்கூடாது இல்லையா?

    இந்த சம்பவத்தை மறக்கவே நமக்கு காலம் பிடிக்கும்.. ஆனால் அதற்குள் இன்னொரு குண்டை தூக்கி போட்டுள்ளார் திண்டுக்கல்லார்.. திண்டுக்கல் நாகன் நகரில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார்.

    "வார்ரே வா".. இதெல்லாம் உண்மைதானா.. இப்படித்தான் பாஜக அட்டாக் பண்ணப் போகுதா.. பதற வைக்கும் லிஸ்ட்!

    மேடையில் பேச வந்தார்.. ஆரம்பமே உளறல்தான்.. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்றார்.. பிறகு, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நடத்தப்போவதாக ஸ்டாலின் கூறியுள்ளார் என்றார்.. பிறகு, தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதாமல் டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார் என்றார்.

    அமைச்சர் இப்படி சொல்லியதுமே அந்த மேடையில் உட்கார்ந்திருந்தவர்களும், பொதுமக்களும் விக்கித்து போய்விட்டனர்.. அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று, மாணவர்களின் மருத்துவ வாய்ப்பிற்காக கொண்டுவரப்பட்டதுதான் 7.5 சதவீத இடஒதுக்கீடு... ஆனால், இது தெரியாமல், இது சம்பந்தமான மொத்த விஷயங்களையும் தாறுமாறாக சொல்லி, அந்த கூட்டத்தையே தெறிக்க விட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இன்னும் இந்த தேர்தல் முடிவதற்குள் எதையெல்லாம் நம் மக்கள் கேட்க வேண்டுமோ தெரியவில்லை...!

    English summary
    Dindigul Srinivasans Controversy Speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X