திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்ஸ் ஆப்பை விட நவீன செயலியை உருவாக்கிய திண்டுக்கல் மாணவன்.. பிளே ஸ்டோரில் "ஆட்" செய்த கூகுள்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் whatsapp - ஐ விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்ட செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

Recommended Video

    வாட்ஸ் ஆப்பை விட நவீன செயலியை உருவாக்கிய திண்டுக்கல் மாணவன்.. பிளே ஸ்டோரில் சேர்த்த கூகுள்

    திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரனேஷ். 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர் பிரனேஷ் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் கூகுளினால் நடத்தப்படும் கோடிங் ஆன்லைன் கிளாஸில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக மாணவர் பிரனேஷ் வாட்ஸ்அப் செயலி போல "ஜெட் லைவ் சாட்" என்ற புதிய செயலியை உருவாக்கினார். இந்த செயலியை கூகுள் நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.

    கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த விரைவில் அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த விரைவில் அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம்

    புதிய செயலி

    புதிய செயலி

    இதற்கிடையே நேற்று கூகுள் நிறுவனம் இந்த புதிய செயலிக்கு ஒப்புதல் அளித்து ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. தற்போது ப்ளே ஸ்டோரில் சென்று ஜெட் லைவ் சாட் என டைப் செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய செயலி வாட்ஸ் அப் செயலியை விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்டுள்ளன.

    பாதுகாப்பு அதிகம்

    பாதுகாப்பு அதிகம்

    ஒருவர் அனுப்பும் தகவலை நமக்கு அறிமுகமில்லாத நபர் யாரும் பார்க்க முடியாது. பதிவிறக்கமும் செய்ய இயலாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் ஒரு தகவலை ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் இந்த புதிய செயலி மூலம் ஒரு தகவலை ஒரே நேரத்தில் பதினைந்து நபர்களுக்கு அனுப்பலாம்.

    புதிய செயலி

    புதிய செயலி

    இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் உருவாக்கியுள்ள இந்த புதிய செயலி, வாட்ஸ் ஆப்பைவிட பல்வேறு பரிணாமம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் செய்துள்ள இந்த புதிய சாதனைக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள்

    பள்ளி, கல்லூரி மாணவர்கள்

    ஊரடங்கு காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்போன், டிவி என மூழ்கி தங்களது நேரத்தை வீணடிக்காமல் ஒன்பதாம் வகுப்பு மாணவரின் இந்த சாதனை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவருக்கு பாராட்டுகளும் சான்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    9th standard student in Dindigul, designed Jet Live Chat which is faster than Whatsapp. Google added this application in its play store.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X