திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்காளர் பட்டியலிலும் ஹிந்தி மொழியா...டென்ஷனான திமுக

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் பெயர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    வாக்காளர் பட்டியலிலும் ஹிந்தி மொழியா...டென்ஷனான திமுக - வீடியோ

    தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஜனவரி 20 ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பெயர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

    DMK condemn for Voters list is printed in hindi and english

    இதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்து நேற்று புகார் அளித்தனர். மேலும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் செய்யாமலும், ஒரே நபரின் பெயர் இரண்டு மற்றும் மூன்று முறை பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ,வாக்காளர் பட்டியல் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் . இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட திமுக கழக துணை பொதுச்செயலாளர் நாகராஜ் செய்தியாளரிடம் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் புதிதாக இந்தி திணிப்பை கொண்டு வந்துள்ளது, மத்திய அரசு.

    DMK condemn for Voters list is printed in hindi and english

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவரின் பெயர்கள் நீக்கம் செய்ய படாமலும் ஒரு வாக்காளர் பெயர் இரண்டு, மூன்று முறை பட்டியலில் வந்துள்ளதாகவும் இந்த குறைபாடுகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளோம் என்றார்.

    English summary
    DMK condemn for Voters list is printed in hindi and english
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X