திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

Edappadi Palanisamy says about Dindigul Corona infection

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ 2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ 8 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூ 8 கோடியே 88 லட்சம் மதிப்பில் முடிவற்ற கட்டுமான பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

மும்பையில் பேய்க்காற்றோடு பெய்த கனமழை - வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கைமும்பையில் பேய்க்காற்றோடு பெய்த கனமழை - வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார் முதல்வர். முன்னதாக சேலத்திலிருந்து திண்டுக்கல் வந்த முதல்வர் இதைத் தொடர்ந்து மதுரைக்கு புறப்படுகிறார். அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதைத் தொடர்ந்து நாளை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

English summary
Tamilnadu CM Edappadi Palanisamy says that Corona infection gradually decreased in Dindigul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X