திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலையில் இருந்து வெளியேறும் மரபுவழி நீர்ப்பாதையை இடைமறித்து ராஜவாய்க்காலில் கட்டியுள்ள தடுப்பணையால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடகனாற்றில் நீர்வரத்து இல்லாமல் அந்த ஆறே செத்துகிடக்கிறது; ஆகையால் இந்த தடுப்பணையை உடனே அகற்ற வேண்டும் என்று குடகனாறு பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Farmers urge to Restore Water Channel for Kodaganar River

குடகனாறு பாசன பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் அனுமந்தராயன்கோட்டையில் நடைபெற்றது. இதில் ஆத்தூர் முதல் வேடசந்தூர் வரையிலான விவசாய பிரதிநிதிகளும், தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர்.

Farmers urge to Restore Water Channel for Kodaganar River

இக்கூட்டத்தில் நரசிங்கபுரம் ராஜாவாய்க்காலில் மரபுவழி குடகனாறை இடைமறித்து கட்டியுள்ள தடுப்பணையை அகற்றுவது குறித்தும், முறையான நீர்பங்கீடு பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Farmers urge to Restore Water Channel for Kodaganar River

மேலும், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவிடம் (நீர்வள ஆதாரத்துறை & பொதுப்பணித்துறை ) குடகனாற்றின் பூர்வீக வரலாற்று அரசு ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை முழுமையாக வழங்கி நியாயம் கோருவதென முடிவெடுக்கப்பட்டது. நடுநிலையான நியாயம் தவறும் பட்சத்தில் முறையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

வரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார் வரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்

English summary
Farmers had urged to Restore the Water Channel for the Kodaganar River in Dindigul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X