• search
திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

10ம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்காக கொடைக்கானல் சுதீஷ் கொடுத்த ஆபர்.. கேரளா முழுக்க வைரல்

Google Oneindia Tamil News

கொடைக்கானல் : இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில பெயில் ஆனவர்க இரண்டு நாட்கள் கொடைக்கானலில் உள்ள தன்னுடைய காட்டேஜில் இலவசமாக தங்கி (உணவு வசதிகள் உள்பட) சுற்றி பார்க்கலாம் என சுதீஷ் என்பவர் ஆபர் அறிவித்துள்ளார்.

கேரளாவை பூர்வீமாகக் கொண்ட சுதீஷ் கொடைக்கானலில் செட்டில் ஆனவர் இவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவு கடந்த சில நாட்களாக கேரளாவில் வைரலாகி வருகிறது.

தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் மனஉளைச்சலை சந்திப்பார்கள், உற்சாகத்தை இழந்து சிலர் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். வீட்டில் பெற்றோர்கள் தி ட்டுவதாலும் நண்பர்கள் கிண்டல் செய்வார் என்று எண்ணுவதாலும் பலர் வாழ்க்கையே தோற்றது போல் நம்பிக்கை இழக்கிறார்கள்.

3 நாட்கள் முன்.. நூலிழையில் உயிர் தப்பித்த டேனிஷ்.. ஆப்கானில் கொல்லப்பட்டது எப்படி? - பின்னணி 3 நாட்கள் முன்.. நூலிழையில் உயிர் தப்பித்த டேனிஷ்.. ஆப்கானில் கொல்லப்பட்டது எப்படி? - பின்னணி

ஆனால் உண்மையில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு உள்பட எந்த வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடாது. வாழ்க்கை என்பது பாடங்களை கற்றுக்கொண்டு. திறமைகளை கண்டு உணர்ந்து புதிய தொடக்கத்தை ஆரம்பித்து பிடித்தபடி வாழ்வதுதான் .

18 வருடம்

18 வருடம்


கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் சுதீஷ் . இவர் 18 வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் வந்து வாழ்க்கையை ஆரம்பித்தவர் இங்கேயே வசதி வாய்ப்புகளுடன் செட்டில் ஆகிவிட்டார். சொந்தமாக சுற்றுலா விடுதிகளை நடத்தி வருகிறார்கள். சொகுசு காட்டேஜ்களை கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார் சுதீஷ்.

கொடைக்கானல் சுற்றுலா

கொடைக்கானல் சுற்றுலா

சுதீஷ் அண்மையில் வெளியிட்ட பேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவர் தனது பதவில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில பெயில் ஆனவர்க இரண்டு நாட்கள் கொடைக்கானலில் உள்ள தன்னுடைய காட்டேஜில் தங்கி இலவசமாக தங்கி சுற்றி பார்க்கலாம் என்று அறிவித்தார். உணவு தங்கும் அனைத்தும் இலவசம் என்றும கூறினார். இதை பார்த்து ஆச்சர்யம் அடைந்த மலப்புரம் இளைஞர்கள் ஆர்வத்துடன் அவரிடம் கேட்டார்கள். அப்போது உண்மையான தகவல் தான் என்பது உறுதியானது.

நம்பிக்கைக்காக

நம்பிக்கைக்காக

இதுபற்றி சுதீஷ் கூறும் போது, "எல்லோரும் வெற்றியாளர்களைப் பற்றி பேசுகிறார்கள், தோல்வியுற்றவர்களுக்கு தனிமையான வாழ்க்கை வேண்டும். மிகச் சிலரே தோல்வி அடைகிறார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் இடையில் அவர்களின் விரக்தியை இன்னும் அதிகமாக இருக்கும். அவர்களிடம் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காக நான் இந்த வாய்ப்பை வழங்கினேன்" என்கிறார். இந்த மாத இறுதி வரை இலவச வாய்ப்பு அளிப்பேன் என்று கூறினார். அதாவது ஜூலை இறுதிவரை 10ம் வகுப்பு பெயில் ஆனவர்கள் இலவசமாக கொடைக்கானலை சுற்றி பார்க்கலாம்.

ஏற்பாடுகள் செய்தார்

ஏற்பாடுகள் செய்தார்

கண்ணூரில் வாழும் ஒரு இளம் பெண், குடும்பம் உடைந்து போனதால் என்னை அழைத்தார் . இரண்டு நாட்களுக்கு தனது மோசமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க கொடைக்கானலுக்குச் செல்ல விரும்பி இருக்கிறார். ஆனால் அவரை அழைத்துச் செல்ல யாரும் இல்லை. அந்த பெண்ணை பாதுகாப்பாக இங்கு அழைத்து வருவதற்கு நான் சில ஏற்பாடுகளை செய்தேன் " என்று சுதீஷ் கூறினார்.

தனியாக வேண்டாம்

தனியாக வேண்டாம்

இன்னொரு சிறுவன் பேஸ்புக் பதிவு பார்த்து ஏற்கனவே கொடைக்கானலுக்கு தனியாக வர தனது பைகளை மூட்டை கட்டி வைத்திருந்தான். அவர் தனியாக பயணம் செய்ய முடியாத அளவிற்கு சிறியவன் என்பதால் பெற்றோருடன் மட்டுமே வரவேண்டும் என்று அறிவுறுத்தினேன் என்கிறார் சுதீஷ். நல்ல மனம் வாழ்க.

English summary
Sudheesh Offer of free stay at Kodaikanal for failed SSLC students goes viral on facebook.Sudheesh said he may extend the offer beyond this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X