திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழனியில் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்த காயத்ரி ரகுராம் - வெயிட்டான பதவிக்கு வேண்டுதல்

Google Oneindia Tamil News

பழனி: தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் பழனி முருகன் கோவிலில் காவடி தூக்கி வந்து முருகனை தரிசனம் செய்தார். வெயிட்டான வேண்டுதலை பழனி முருகனிடம் வைத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான திருஆவினன்குடி எனப்படும் பழனி மலை முருகனுக்கு தான் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக காவடி எடுத்துவந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு.

Gayathri Raghuram who took Kavadi in Palani and performed Sami darshan

பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி வரும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் அசுரனான இடும்பன் தான். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது குறுமுனியான அகத்தியர் தான். காவடி சுமந்து வந்து வேண்டுதல் வைக்கும் பக்தர்களின் கவலைகளை போக்கி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் பழனி தண்டாயுதபாணி.

இந்த நம்பிக்கையில் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் பழனி முருகன் கோவிலில் காவடி தூக்கி வந்து முருகனை தரிசனம் செய்துள்ளார்.

காவடியை சுமந்து கிரிவலம் வந்து படியேறி தண்டாயுதபாணியை தரிசனம் செய்துள்ளார் காயத்ரி ரகுராம். சாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், பாஜகவில் தற்போது ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். நடிகை குஷ்புவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

Gayathri Raghuram who took Kavadi in Palani and performed Sami darshan

ஷாக்.. அண்ணனை சவப்பெட்டியில் அடைத்து.. சாவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த தம்பி.. பாய்ந்தது வழக்கு!ஷாக்.. அண்ணனை சவப்பெட்டியில் அடைத்து.. சாவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த தம்பி.. பாய்ந்தது வழக்கு!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அனைவரையும் பிரதமர் மோடி வழி நடத்துவார் என்று தெரிவித்தார்.

காவடி சுமந்து மலையேறி போய் பழனி முருகனிடம் வெயிட்டான வேண்டுதலை வைத்து விட்டு வந்திருக்கிறார் காயத்ரி ரகுராம். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்குமா முருகனின் அருள் கிடைக்குமா பார்க்கலாம்.

English summary
Actress Gayatri Raghuram, who is the secretary of the arts and culture wing of the Tamil Nadu BJP, came to the Palani Murugan Temple to pay obeisance to Lord Murugan. Gayatri Raghuram has a long request to Palani Murugan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X