திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தரையில் உருண்டு அழுது புரண்ட ஸ்கூல் எச்எம்.. மிரட்சியடைந்த மாணவர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு!

தரையில் புரண்டு உருண்டு தலைமை ஆசிரியை டிரான்ஸ்பர் கேட்டுள்ளார்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ஸ்கூல் எச்.எம். தரையில் அழுது.. புரண்டு.. உருண்டு.. அடம்பிடித்ததை பார்த்ததும், மாணவர்கள் மிரண்டு ஓடியே போய்விட்டனர்!

சில மாதங்களுக்கு முன்பு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, ஓய்வூதிய சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இதில் நல்ல முடிவு எட்டப்படவில்லை. இதன் பாதிப்பு குஜிலிம்பாறை அரசு பள்ளி வரை எதிரொலித்து உள்ளது.

பழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை பழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை

இந்திரா

இந்திரா

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 3 வருஷமாக தலைமை ஆசிரியையாக உள்ளவர் இந்திரா.. இங்கு மொத்தமே 2 மாணவர்கள்தான் படித்து வருகிறார்கள்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

இதனால் மனமுடைந்த இந்திரா, தன்னால் பாடமே நடத்த முடியவில்லை என்றும், டிரான்ஸ்பர் தந்து எங்காவது அனுப்பிவிடுங்கள் என்றும் பலமுறை பலமுறை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதை யாரும் பரிசீலிக்கவில்லை போல தெரிகிறது. அதனால் கடுமையான மன உளைச்சலில் இந்திரா தவித்து வந்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், இடமாறுதலுக்காக கவுன்சிலிங் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அப்போது அதிகாரிகளிடம் திரும்பவும் டிரான்ஸ்பர் குறித்த கோரிக்கையை முன்வைத்தார். "என் ஸ்கூலில் வெறும் 2 மாணவர்களே படித்து வருகிறார்கள். அவங்களும் எப்போதாவதுதான் ஸ்கூலுக்கு வருகிறார்கள்.. எனக்கு டிரான்ஸ்பர் தந்துடுங்க.." என்று கதறி அழுதார். ஆனால், இதற்கு கவுன்சிலிங் நடத்த வந்த அதிகாரிகள் மறுப்பு சொன்னார்கள்.

சமாதானம்

சமாதானம்

கணக்குபடி 3 வருடங்கள் நிறைவு பெறாததால் பணியிட மாறுதல் வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்திரா திடீரென தரையில் புரண்டு, புரண்டு கதறி அழுதார்.. அங்கிருந்த பலரும் சமாதானப்படுத்தியும் இந்திராவை சமாளிக்க முடியவில்லை.. தகவலறிந்து போலீசார் வந்தபிறகுதான் இந்திரா போராட்டத்தை கைவிட்டார். போலீசாரிடமும் தன் நிலைமையை விளக்கினார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தன்னை டிரான்ஸ்பர் செய்யக் கோரி அழுது புரண்டுள்ள இந்த சம்பவம் பரவி வருகிறது.

English summary
"i have only 2 students, need transfer" govt school head mistress dharna near dindigul
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X