திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடைக்கானலில் கண்ணை கவரும் மேகமூட்டம்.. பனிச்சாரல்.. குவிந்த மக்கள்.. அசத்தல் வீடியோ!

கொடைக்கானலில் பனியுடன் அதிக அளவில் மேகமூட்டமாக வானிலை காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் ஆகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடைக்கானலில் கண்ணை கவரும் மேகமூட்டம்

    கொடைக்கானல்: கொடைக்கானலில் பனியுடன் அதிக அளவில் மேகமூட்டமாக வானிலை காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் ஆகி இருக்கிறது.

    கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறது. இது கொடைக்கானலில் சீசன் நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடைக்கானலில் பொதுவாக நவம்பர்,டிசம்பர்,ஜனவரி ஆகிய 3-மாதங்கள் பனிப்பொழிவு காலமாகும். இந்த நேரத்தில் மக்கள் வரத்தும் அங்கு அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த நவம்பர் மாதம் கொடைக்கானலில் பரவலாக மழை பெய்தது.

    பனியின் தாக்கம்

    பனியின் தாக்கம்

    இதனால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் இரவில் அதிகமான பனியின் தாக்கமும் நிலவியது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்பு அடைந்தது .

    மேகமூட்டம் அதிகம்

    மேகமூட்டம் அதிகம்

    இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே கொடைக்கானலில் மேகமூட்டம் தொடர்ந்து நிலவியது. வெயில் இல்லாமல் இருந்தது. இன்றும் அதிகாலை முதல் அதிகமான மேகமூட்டமும் பனிச் சாரலும் நிலவியது. அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலை இதனால் ஏற்பட்டது.

    மலைச் சாலை தெரியவில்லை

    மலைச் சாலை தெரியவில்லை

    தரை முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டது. மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றது. ஆனாலும் கூட எதிரே வரும் வாகனங்களை சரியாக வாகன ஓட்டிகள் பார்க்கக் முடியவில்லை. இதனால் வாகன ஓட்டுனர்கள் சற்று சிரமப்பட்டனர்.

    பல மாநில மக்கள்

    இந்த இயற்கை சூழ்நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டும் அல்லாது பல மாநிலங்களில் இருந்து வழக்கமாக கொடைக்கானலுக்கு வாரவிடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை இன்று அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானல் தற்போது மேக மூட்டத்துடன் கூடிய பனி சாரல் தொடர்ந்து பொழிந்து வருகிறது.

    எங்கிருந்து

    எங்கிருந்து

    இதை பார்ப்பதற்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்தனர். இன்று நண்பகல் வேளையிலும் பனி சாரல் மீண்டும் பொழிய தொடங்கியது. இதனால் இங்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மேகமூட்டத்துடன் கூடிய பனி சாரல் மழையை ரசித்து உற்சாகமடைந்தனர்.

    சுற்றுலா இடம்

    சுற்றுலா இடம்

    சுற்றுலா இடங்களை பார்க்க வந்த பயணிகள் அதிகமான மேகமூட்டம் நிலவியதால் சுற்றுலா இடங்களான குண குகை ,பில்லர் ராக்,பசுமை பள்ளத்தாக்கு,மொயர்பொய்ன்ட் ,கொக்கேர்ஸ்க்வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் . மேலும் இந்த சீதோஷண நிலையை அனுபவித்தவாறு நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    English summary
    Heavy Mist in Kodaikanal: High Number of Tourists visited The Queen of Mounts today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X