திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனா, பாகிஸ்தானின் அத்துமீறல்கள்.. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.. 15 பேர் கைது

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா மற்றும் பாகிஸ்தானை கண்டித்து இரு நாட்டின் பிரதமர்களின் உருவபடங்களை காலணியால் அடித்து போராட்டம் நடத்தப்பட்டது.

Recommended Video

    சீனா, பாகிஸ்தானின் அத்துமீறல்கள்.. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.. 15 பேர் கைது

    இந்திய நாட்டின் எல்லை பகுதிகளில் அத்துமீறும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை கண்டித்தும், பாஜகவிற்கு முன்பு ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    Hindu Makkal Party protest against China and Pakistans violation in border areas

    இதையடுத்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையில் சீனா, மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் உருவப்படத்தை செருப்பால் அடித்து மாநகராட்சியில் இருந்து ஊர்வலமாக வந்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    Hindu Makkal Party protest against China and Pakistans violation in border areas

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் புகைப்படங்களை எரிக்க விடாமல் தடுத்து அவற்றை கைப்பற்றியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட தர்மா உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் 15 பேரை கைது செய்தனர்.

    இந்தியாவை சீண்ட வேண்டாம்.. லடாக் பிரச்சனையில் அடுத்தடுத்து பின்வாங்கும் சீனா.. என்ன நடந்தது? பின்னணிஇந்தியாவை சீண்ட வேண்டாம்.. லடாக் பிரச்சனையில் அடுத்தடுத்து பின்வாங்கும் சீனா.. என்ன நடந்தது? பின்னணி

    English summary
    Hindu Makkal Party protest against China and Pakistan's violation in border areas. Police arrested 15 members of the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X