திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது.. இயேசுநாதரை கோட்சே சுட்டுட்டாரா.. "குண்டை"ப் போட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

Google Oneindia Tamil News

நத்தம்: இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுகளா நாங்க? என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுகளா நாங்க? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு - வீடியோ

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட கணவாய்பட்டி கருப்பு பகுதி மற்றும் முளையூர் பகுதிகளில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் துவக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

    Jesus Christ shot deady by Godse, says Tamilnadu Minister Dindigul Srinivasan

    முளையூர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து கர்ப்பமடைந்த பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:

    எந்த திட்டங்களை செய்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறார். 2500 ரூபாயை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்கிறார்கள், பொங்கல் பரிசு கொடுக்கிறார்கள். வேஷ்டி சேலைகள் கொடுக்கிறார்கள். அதில் ரூ500 சேர்த்தால் ரூ3,000 ஆகிறது. இதை அமைச்சர் கொடுக்கிறார்.

    ஆனால் இது ஏமாற்று வேலை என்கின்றனர். மாமியார் உடைத்தால் மண்குடம்... மருமகள் உடைத்தால் பொன் குடமா?

    திமுக ஆட்சியில் அவங்க அப்பா அவங்கள் எல்லாம் செஞ்சிருந்தா புத்தர்கள் வாரிசு.. இயேசுநாதர் வாரிசு... நாம செஞ்சிருந்தா இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுகள் மாதிரி எது செஞ்சாலும் தப்பு? இதெல்லாம் எதுக்கு செய்யணும் ஓட்டுக்காக பண்றாங்க.. இவ்வாறு சீனிவாசன் பேசினார்.

    இயேசுநாதரை சுட்டது கோட்சே என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Tamilnadu Minister Dindigul Srinivasan said that Jesus Christ shot deady by Godse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X