திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வணக்கங்க, நான் கமல் பேசுறேன்.. லஞ்சம் கேட்டீங்களாமே.. "முதல்வன்" ஸ்டைலில் கலக்கிய "நாயகன்"!

லஞ்சம் கேட்ட அரசு அதிகாரிகளை கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜாவால் பாதிக்கப்பட்ட பெருமாள் மலை | பார்வையிட்ட கமல்

    கொடைக்கானல்: "வணக்கங்க. நான் கமல்ஹாசன் பேசுகிறேன்.. அப்பாவி மக்கள் கிட்ட பணம் கேட்டீங்களாமே" என்ற கமலின் கேள்விக்கு ஆடிப்போய் விட்டார்கள் அதிகாரிகள்.

    கஜாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான இடம் கொடைக்கானல். இந்த வழியாகத்தான் கஜா கரையை கடந்து போனது. அதனால்தான் நிறைய பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த பகுதிகளை சந்திக்கவும், மக்களின் தற்போதைய நிலையை அறியவும் கமல் சென்றார். இதற்காக சிலை திறப்பு விழாவைகூட விட்டு விட்டு அங்கு போனார்.

    பொதுமக்கள் புகார்

    பொதுமக்கள் புகார்

    ம‌லைய‌க்காடு என்ற பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி மக்கள் கமலை பார்த்ததும் ஓடி சென்று அவரிடம் நின்று கொண்டார்கள். புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் என்று முதல் வேலையாக கமலிடம் புகார் சொன்னார்கள்.

    அதிகாரிக்கு போன்

    அதிகாரிக்கு போன்

    இதை கேட்டதும், கமல் ஷாக் ஆனார். உடனே அந்த அதிகாரி போன் நம்பர் இருக்குங்களா? என்று கேட்டார். ஊராட்சி அலுவலரின் பெயர் லஞ்சம் கேட்ட அதிகாரியின் செல்போன் நம்பரை மக்கள் கமலிடம் தந்தார்கள். அதை பெற்றுக் கொண்ட கமல், அதிகாரிக்கு போன் செய்தார்.

    வணக்கங்க...

    வணக்கங்க...

    அப்போது, "வணக்கங்க. நான் கமல்ஹாசன் பேசுகிறேன். இங்க வீடு கட்டும் திட்டத்துக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இருக்கிறது. ஆனா அதை நீங்க கட்டி தர்றதுக்கு அவங்க எதுவும் ரூ.50 ஆயிரம் முன் பணம் கொடுக்கவேண்டி உள்ளதா? என கேட்கிறார்.

     அவ்வளவுதாங்க

    அவ்வளவுதாங்க

    அதற்கு அந்த அதிகாரி என்னவோ பதில் அளிக்கிறார். உடனே கமல், "ஆங், அவ்வளவுதானே... இவங்க எதுவும் பணம் கொடுக்க வேண்டியது இல்லையே" என கேட்கிறார். திரும்பவும் அதிகாரி பதில் ஏதோ சொல்ல, "இங்க யாரோ வந்து கேட்டிருக்காங்க. சரி. ஓக்கே. லஞ்சம் கேட்காமல் பார்த்துக்கங்க. இங்க நாங்களும் பார்த்துக்கிட்டிருக்கோம்." என்று சொல்லி போனை கட் பண்ணுகிறார் கமல்.

    எங்ககிட்ட சொல்லுங்க

    எங்ககிட்ட சொல்லுங்க

    பிறகு மக்களிடம், "வீடு கட்ட நீங்க யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. அப்படி யாராவது வந்து பணம் கேட்டால் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவங்க கிட்ட சொல்லுங்கள்" என்றார்.

    ஆடியோ வைரல்

    ஆடியோ வைரல்

    இவ்வளவும், ஊடகங்கள் முன்பே நடந்து முடிந்தது. கமல் அதிகாரியிடம் பேசிய இந்த வீடியோதான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    MNK Kamal Hasan visit Gaja Cyclone damages in Kodaikanal and condemned govt officers. This audio goes viral now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X