திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு

வேடசந்தூர் உருசு விழாவில் ஜோதிமணி கலந்து கொண்டார்.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: பச்சை கலர் புடவையில் ஜொலி ஜொலித்தார் ஜோதிமணி... வேடசந்தூரில் உருசு விழாவில் கலந்து கொண்டபோதுதான் இப்படி காட்சியளித்தார்!

இஸ்லாத்தின் மீது அதிக பிடிப்புள்ளவர் கரூம் எம்பி ஜோதிமணி. 2015, ஜுன் 27-ல் இவர் ஒரு பதிவு ஒன்று போட்டார். அப்போதுதான் இஸ்லாமியர்களை பற்றியும் அந்த மதம் சம்பந்தமான தன்னுடைய நிலைப்பாட்டையும் தெரிவித்திருந்தார்.

Karur Congress MP Jothimani tweet about Urusu Festival in Vedachandur

அதன் சுருக்கம் இதுதான்: "இந்து ,பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர் . எளிய வாழ்வையும் ,சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிறுத்துகிறது .

"வண்டியை ஓரங்கட்டுங்க.. போட்டோ எடுங்க இவரை.. ஏன் ஹெல்மட் போடல?".. அதிர வைத்த இணை கமிஷனர்

இன்று மத அடிப்படைவாதிகள் முன்னிறுத்துகிற இஸ்லாத்துக்கும் ,உண்மையான இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . தாலிபான்களும் ,ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொடூரமான அமைப்புகளும் இஸ்லாத்தின் பெயரால் செய்கிற அட்டூழியங்களும் ,அவற்றையே உண்மையான இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று விமர்சிப்பதுபோல் சித்தரிக்கும் போக்கும் ஆபத்தானது .

உண்மையான முஸ்லிம்களுக்கு அதை எதிர்த்து நிற்கவேண்டிய சவால் காத்திருக்கிறது . அதை எதிர்கொள்வது எளிதானதல்ல. மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படைவாதிகளை ஊட்டி வளர்க்கிறது . இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

எத்தனை பேருக்கு இந்த பதிவு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் வேடசந்தூர் தர்காவில் நடைபெற்ற உருஸ் விழாவில் ஜோதிமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். இஸ்லாமிய பெருமக்கள், குழந்தைகளுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். பச்சை கலர் சேலையில் ஜோதிமணியை பார்க்கவே பளிச்சென இருந்தது.

English summary
Karur MP Jothimani has participated in Vedachandur Urusu festival and tweet about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X