திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன?.. திக்திக் கொடைக்கானல்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கேரள இளைஞர்களின் கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பலியாகினார்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது வகையில் விபத்து நடந்து உயிர் பலி ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டு உயிர் பலி ஏற்படாத வண்ணம் போலீஸார் பல்வேறு விதிகளை வகுத்துள்ளனர்.

எனினும் ஊர் விட்டு ஊர் போயாவது உயிரை மாய்த்து கொள்கின்றனர். இப்படிதான் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கேரள மாநிலம் அமலாஹூஸ் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு உள்ளிட்ட 7 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர்.

1000 அடி

1000 அடி

இதைத் தொடர்ந்து பழனியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சொகுசு காரில் நேற்று வந்தனர். அப்போது கொண்டை ஊசி வளைவில் உள்ள சவரிக்காடு அருகே கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒருவர் பலி

ஒருவர் பலி

அந்த நேரத்தில் கார் கதவை திறந்து குதித்ததில் 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவரும் அதுபோல் குதித்த போது மரத்தின் மீது சிக்கி பலியாகிவிட்டார். இன்னும் இருவரது நிலை என்ன என்பது தெரியவில்லை.

விசாரணை

விசாரணை

காயமடைந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் போது இளைஞர்கள் குடிபோதையில் இருந்தனரா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

பனிமூட்டம்

பனிமூட்டம்

மேலும் கொடைக்கானலில் தற்போது பனிப்பொழிவு காரணமாக முன்னால் செல்லும் வாகனம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் சாலை தெரியாமல் பள்ளத்தில் வாகனத்தை விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

English summary
Keralites who travel to Kodaikkanal to celebrate New Year met with an accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X