திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்ரியோ.. ட்ரியோ.. ட்ரியோ.. டுய்ய்ய்ய்.. ஜட்கா ஓட்டி திண்டுக்கல்லை மிரள வைத்த மன்சூர் அலிகான்!

பழனி, நிலக்கோட்டை பகுதிகளில் மன்சூரலிகான் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜட்கா ஓட்டி திண்டுக்கல்லை மிரள வைத்த மன்சூர் அலிகான்!-வீடியோ

    திண்டுக்கல்: "பாட்டி.. எனக்கும் இட்லி சுட்டுக்குடு?" என்று சாலையோர இட்லி கடை வைத்துள்ள மூதாட்டியிடம் உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிட்டார் மன்சூரலிகான்!

    நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மன்சூர் அலிகான், தொகுதிக்குள் சென்று எல்லா வேலைகளையும் பார்த்து முடித்துவிட்டார் போல.. எந்த வேலையும் பாக்கி வைத்தது போல தெரியவில்லை.

    வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக நெருங்கி பழகி வாக்கு சேகரித்தது இவரது பிளஸ். இப்படித்தான் நேற்று பழனியில் திடீரென ஒரு ஜூஸ் கடைக்குள் புகுந்தார். "நானே ஜூஸ் போடறேன்" என்று நுழைந்து பழங்களை பிழிந்தெடுத்தார்.

    "கர்ர்ர்ர்ர்...தூ.. கஸ்தூரி உண்மையில் யாரைக் காரி துப்பியிருக்கிறார்?.. புது டிவீட்டால் பரபரப்பு!

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    பிறகு பஸ் ஸ்டேண்டில் வரிசையாக குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஓட்ட ஆரம்பித்தார். சும்மா சொல்லக்கூடாது.. ஒரு கையில் குச்சியை வைத்து கொண்டு வண்டியை ரோட்டில் வேகமாகவே ஓட்டினார்.

    குதிரை வண்டிக்காரன்

    குதிரை வண்டிக்காரன்

    இப்படி ஒரு குதிரைவண்டிக்காரனை இதுவரை பார்த்ததே இல்லையே என்ற ரேஞ்சில் சாலையில் செல்பவர்கள் மன்சூரை பார்த்து கொண்டே சென்றார்கள். அவர்களிடம் கரும்பு விவசாயி சின்னத்துக்கு ஓட்டுப்போடணும் தெரியுதா? என்று சொல்லி கொண்டே வண்டி ஓட்டினார்.

    தண்ணி இல்லீங்க

    தண்ணி இல்லீங்க

    வத்தலக்குண்டு பகுதியில் பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். "தண்ணி எத்தனை நாளைக்கு ஒருமுறை வருதும்மா.. " என்று விசாரித்தார். "இது நல்ல தண்ணி இல்லீங்க.. உப்பு தண்ணி.. நல்ல தண்ணியை விலை கொடுத்து வாங்கறோம்" என்று பெண்கள் சொன்னார்கள். உடனே மன்சூரலிகான். "அப்புறம் எதுக்கும்மா தண்ணிக்கு வரி கட்டறீங்க?" என்றார்.

    இட்லி சுட்டு தா

    இட்லி சுட்டு தா

    அதன்பிறகுதான் ரோடு ஓரம் ஒரு பாட்டி இட்லி சுட்டு விற்று கொண்டிருந்தார். "பாட்டி.. பசிக்குது.. எனக்கும் இட்லி சுட்டு தா" என்று அங்கே இருந்த ஒரு திண்ணையில் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டு விட்டே அடுத்த இடத்துக்கு நகர்ந்தார்!

    English summary
    Dindigul Naam Tamizhar party Candidate Mansoor Ali Khan campaigned in Palani and Nilakkottai areas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X