திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூடான வடை பாரு.. மன்சூரு சுடுராரு.. ஒரு வடை 8 ரூபாதாங்க.. அதகளப்படும் திண்டுக்கல்!

திண்டுக்கல் டீ கடையில் வடை சுட்டு மன்சூரலிகான் வாக்கு சேகரித்து வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டீக்கடை வாசலில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான்-வீடியோ

    திண்டுக்கல்: "வாங்க.. வாங்க.. 8 ரூபாய்.. 8 ரூபாய்.. ஒரு வடை 8 ரூபாய்.. சூடான வடை" என்று டீக்கடை வாசலில் விற்று கொண்டிருந்தார் மன்சூரலிகான்!

    எல்லா கட்சி வேட்பாளர்களுக்கும் தலைவர்களோ, பிரபலங்களோ பிரச்சாரம் செய்து ஓட்டு கேட்கிறார்கள் என்றால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் அது தேவையே படாது. அந்த அளவுக்கு தாங்களே பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.

    தெலுங்கானாவில்கூட பிரச்சாரத்தின்போது மக்களை கவர என்னென்னவோ செய்தார்கள். ஆனால் பெரும்பாலும் அவை முகசுளிப்பையே தந்தது.

    குமரியார் பெண் என் மகள் போல.. வாழ்த்தினார் கலைஞர்.. நானும் வாழ்த்துகிறேன்.. கனிமொழி பலே! குமரியார் பெண் என் மகள் போல.. வாழ்த்தினார் கலைஞர்.. நானும் வாழ்த்துகிறேன்.. கனிமொழி பலே!

    ரசிக்கும் மக்கள்

    ரசிக்கும் மக்கள்

    ஆனால் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் மன்சூரலிகான், மக்களை கவர எத்தனையோ வகைகளை கையில் எடுக்கிறார்! எல்லாமே தொகுதி மக்களால் ரசிக்கும்படியாகவே உள்ளது!

    தொழிலில் ஐக்கியம்

    தொழிலில் ஐக்கியம்

    ஒருவேளை பாக்கி இல்லாமல் எல்லாவற்றையும் சீரும் சிறப்புமாக செய்து முடித்து வாக்கு கேட்கிறார். இதில் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், என்ன தொழில் செய்கிறாரோ, மன்சூரும் அப்படியே அதே தொழிலில் ஐக்கியமாகி விடுவதுதான்.. பார்ப்பதற்கு நடிப்பு போன்றோ, பாவ்லா போன்றோ தெரியவே இல்லை. வெரி கேஷூவல்!

    டீக்கடை

    டீக்கடை

    இப்படித்தான் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு தட்டில் சோறு வைத்து ஊட்டி கொண்டிருந்தார். அப்பறம் ஆளை காணோம்.. கொஞ்ச நேரத்தில், கலெக்டர் ஆபீஸ் எதிரே உள்ள டீக்கடையில் ஆஜர் ஆகி இருந்தார். "சூடான வடை.. வாங்க... வாங்க.. ஒரு வடை 8 ரூபாய்.. 8 ரூபாய்" என்று விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

    சூடான வடை

    சூடான வடை

    அந்த பக்கமாக செல்பவர்கள், "எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கிறதே.." என்று நினைத்து, அதன்பிறகுதான் மன்சூர் என்று தெரிந்ததும் புன்னகையித்தவாறே நகர்ந்து சென்றனர். ஒருசிலர் இதற்காகவே டீக்கடைக்கு சென்று வடையை வாங்கி சாப்பிட்டனர். எப்படியும் குறிப்பிட்ட ஓட்டுக்களை மன்சூர் வாங்கிவிடுவாராம்.. கன்ஃபார்ம் என்கிறார்கள் தொகுதி மக்கள்!

    English summary
    Mansoor Ali Khan Sales Vada in Dindigul Tea Shop and collects votes for Karumpu vivasayi Symbol
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X