திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு ஓட்டு போட்டீங்கன்னா.. வாராவாரம் நானே மீன் வெட்டி தருவேன்.. சரியா.. மன்சூர் அலிகான் அசத்தல்

பழனி அருகே சந்தையில் மீன் விற்று மன்சூரலிகான் பிரச்சாரம் செய்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Mansoor Ali Khan campaign | திண்டுக்கல் தொகுதியில் மன்சூரலிகான் அசத்தல் பிரச்சாரம்

    திண்டுக்கல்: ஆஸ்பத்திரில் இருந்து திரும்பிய மன்சூரலிகான், மீன் விற்க நேராக சந்தைக்கு போய்விட்டார். "நீங்க எனக்கு போட்டீங்கன்னு வச்சுக்குங்க.. நான் வாரம் வாரம் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன்" என்றார்.

    திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகான் போட்டியிடுகிறார். நித்தம் ஒரு தினுசு பிரச்சாரம் செய்து மக்களையும் கவர்ந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மன்சூரலிகான் பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்தார். உடல்நலக்கோளாறு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Rajinikanth: நல்ல அறிக்கை.. பாஜகவை புகழ்ந்த ரஜினிகாந்த்.. தேர்தலில் மறைமுக ஆதரவு அளிக்கிறாரா?Rajinikanth: நல்ல அறிக்கை.. பாஜகவை புகழ்ந்த ரஜினிகாந்த்.. தேர்தலில் மறைமுக ஆதரவு அளிக்கிறாரா?

     மீன் மார்க்கெட்

    மீன் மார்க்கெட்

    அதன்பிறகு எப்போது டிஸ்சார்ஜ் ஆனார் என்றே தெரியவில்லை.. பழனியை அடுத்துள்ள வண்டிவாய்க்கால் மீன் மார்க்கெட்டில் இருந்தார் மன்சூர்அலிகான்!

    பெங்களூர் மத்திய தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டி.. ஏன் இந்த தொகுதி.. அட இதுதான் காரணமா?

     விலை என்ன?

    விலை என்ன?

    முதல் வேலையாக அங்கு விலைக்கு வாத்துகளை வைத்திருந்தனர். இரண்டு கைகளில், இரண்டு வாத்துக்களை தூக்கி பிடித்தபடியே அதன் எடையை கணித்தார். பிறகு வாத்து விலை எவ்வளவு என்று கேட்டார். பிறகு ஒரு பிளாஸ்டிக் தட்டில் வாத்துக்கு தண்ணி வைத்துவிட்டு மீன் விற்கும் பக்கம் வந்தார்.

     விலை பேசினார்

    விலை பேசினார்

    அங்கு வரிசையாக கடைகளில் மீன்கள் கொட்டிக்கிடக்க, பொதுமக்கள் அதனை விலை பேசி வாங்கி கொண்டிருந்தனர். அதில் ஒரு கடையில் மீன் வாங்கி கிளம்பி சென்றவர்களை அழைத்து, அவர்களிடம் இருந்த மீனை வாங்கி வைத்து கொண்டார்.

     மீன் வெட்டி தருவேன்

    மீன் வெட்டி தருவேன்

    பிறகு ஒரு கத்தி எடுத்து அதன் செதில்களை வெட்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தார். கழிவுகளை அகற்றிய அந்த மீன்களை அவர்களது பையிலேயே போட்டு அனுப்பினார். அப்படி அனுப்பும்போது, "நீங்க எனக்கு போட்டீங்கன்னு வச்சுக்குங்க.. நான் வாரம் வாரம் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன்" என்றார்.

    அங்கிருந்த மீன் வியாபாரிகள் இதையெல்லாம் வெகுவாக ரசித்தாலும் மறக்காமல் செல்பி எடுத்து கொண்டனர்.

    English summary
    Mansoor Ali Khan discharged from the Nilakkottai Hospital and campaigned in Palani Fish Market
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X