திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு விழாவில் செம தூக்கம்.. "அம்மா" கனவில் வந்திருப்பாங்களா.. திண்டுக்கல் சீனிவாசனால் கலகல!

விழா மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பழனியில் அரசு விழா மேடையில் தூங்கி விழுந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்-வீடியோ

    பழனி: தூக்கம் என்ன தூக்கம் அப்படி ஒரு தூக்கம்... இந்த சம்பவம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்ன செய்தாலும் சர்ச்சைதான்.. என்ன பேசினாலும் வைரல்தான். நேற்று பழனியில் ஒரு அரசு விழா நடைபெற்றது.

    கூட்டுறவு துறை சார்பில் பல்பொருள் அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் திறப்பு விழாதான் அது. இந்த விழாவுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். மாவட்ட கலெக்டரும் இந்த விழாவில் பங்கேற்றார்.

    கண் அயர்ந்தார்

    கண் அயர்ந்தார்

    என்ன ஆச்சோ தெரியல... விழா நடந்து கொண்டே இருந்தது... அப்போது அசைவே இல்லாமல் அமைச்சர் மேடையில் உட்கார்ந்து இருந்தார். பிறகு பொதுமக்கள் உற்று பார்த்தால், அமைச்சர் கண் அயர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்.

    கலெக்டர் வினய்

    கலெக்டர் வினய்

    இதனால் கூட்டத்தில் இருந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சரி, அமைச்சர்தான் இப்படி என்று பார்த்தால் கலெக்டரும் கம்பெனி கொடுத்து கண் அயர்ந்து கொண்டிருந்தார்.

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    அசதி என்பது இயற்கையான விஷயம். ராகுல்காந்திகூட பார்லிமெண்டில் கண் அசந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து விழாவை ஏற்பாடு செய்தவர்கள் சொல்லும்போது, வேலை பளு அதிகமாக உள்ள காரணத்தினாலேயே அமைச்சர் இப்படி கண் அசந்து விட்டார் என்றார்கள்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    இருந்தாலும் அரசு விழாவில் அவ்வளவு மக்கள் கூடியிருக்கும்போது, அமைச்சரும், கலெக்டரும் தூங்கி வழிந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Minister Dindigul Srinivasan and Collector Vinay sleeping in Govt.function Video goes Viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X