திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை!

சித்தனாதன் குழுமத்திற்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டால் திமுகவை சேர்ந்த சிலர் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

பழனி: பழனி சித்தனாதன் குழுமத்திற்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டால் திமுகவை சேர்ந்த சிலர் சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் குழுமத்திற்கு தொடர்பான இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக ஐடி ரெய்டு நடந்து வருகிறது. இதுவரை அங்கு கணக்கில் வராத 56 கிலோ தங்கம், ரூ. 95 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சித்தனாதன் குழுமம் என்பது கிட்டத்தட்ட 30 வருடங்களாக பஞ்சாமிர்தம் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய பிரசாதம் சார்ந்த தொழிலை பார்க்கும் ஒரே நிறுவனம் சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் மட்டும்தான்.

56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்!56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்!

எத்தனை பேர்

எத்தனை பேர்

இவர்கள் குடும்பத்தில் மட்டும் மொத்தம் 200 பேர் இருக்கிறார்கள். இதில் 4 பேர்தான் தலைமை வகித்து தொழிலை கவனித்துக் கொள்கிறார்கள். சிவநேசன், அசோக்,ரவி, செந்தில் ஆகிய நான்கு சகோதரர்கள்தான் தொழிலை முன்னின்று நடத்தி வருவது. கூட்டு குடும்பமாக இவர்கள் தங்கள் தொழிலை எந்த விதமான இழப்பும் இன்றி செய்து வருகிறார்கள்.

திமுக குழுமம்

திமுக குழுமம்

சித்தனாதன் குழுமத்தை சேர்ந்தவர்கள் திமுகவை சேர்ந்த சிலருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சித்தனாதன் குடும்பத்தை சேர்ந்த சிலர் திமுக நிர்வாகிகள் சிலருடன் திருமணம் சார்ந்த உறவுகளையும் செய்து கொண்டுள்ளனர்.

 எழலாம்

எழலாம்

இந்த திருமணத்திற்கு திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்ற நிகழ்வு எல்லாம் கூட நடந்து இருக்கிறது. அதேபோல் பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் சில நிர்வாகிகள் அங்கு சித்தனாதன் குழும தலைவர்களை சந்திப்பதும் வழக்கம். ஆனால் இது மரியாதை நிமித்தமாகவும் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

ரொம்ப முக்கியம்

ரொம்ப முக்கியம்

அதே சமயம் சித்தனாதன் குழுமத்தை சேர்ந்த நான்கு டாப் தலைவர்கள் திமுகவினருடன் நட்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல வருடங்களாக இவர்கள் நட்பாக இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் இவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு திமுகவை குறி வைத்து செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கையா என்று கேள்வி எழுந்துள்ளது.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

நாடு முழுக்க தங்களுக்கு எதிராக எழும் குரல்களை ஐடி ரெய்டு கொண்டும், சிபிஐ மூலம் மத்திய அரசு அடக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சித்தனாதன் குழுமம் மாட்டியுள்ளதா என்றும் சிலர் கேட்டுள்ளனர். அதே சமயம் சித்தனாதன் குழுமம் தொடர்பான டைரி ஒன்றும் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது. இந்த டைரியில் சிலரின் பெயர்கள் இருக்கிறது, அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

English summary
Palani Panchamirtham Sithanathan Income Tax Raid may cause damage to DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X