திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் முதல்முறையாக.. கொடைக்கானலில் சதத்தை கடந்த பெட்ரோல் விலை.. மக்கள் அவதி

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100.04 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயம் செய்கின்றன. தற்போது இதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

5 மாநில தேர்தல்களுக்கு பிறகு மே மாதம் 2ஆவது வாரத்தில் பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை தொட்டது. பின்னர் குறைந்தது. இதையடுத்து தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது.

102 ரூபாய்

102 ரூபாய்

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.04 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலை ரூ 93.92 பைசாவிற்கும் ஸ்பீடு பெட்ரோலின் விலை ரூ 102.83 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தமிழகத்தில் முதன்முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது கொடைக்கானலில்தான். இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளார்கள். கொரோனா ஊரடங்கால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

பெட்ரோல் டீசல்

பெட்ரோல் டீசல்

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என கவலை கொண்டுள்ளனர். மேலும் எரிபொருள் விலையை குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வரலாறு காணாத அளவு

வரலாறு காணாத அளவு

இந்தியாவில் ராஜஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ரூ 100 ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Petrol price crosses Rs 100 in Kodaikanal for first time in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X