திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளைஞரின் தலையை துண்டித்த கும்பல்.. திண்டுக்கல்லில் நடந்த திகில் சம்பவத்தின் பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை அருகே இளைஞர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி போலீசிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால் கால் முறிந்து மாவுக்கட்டு போடும் நிலை ஏற்பட்டது.

Recommended Video

    அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்… பதற வைக்கும் பயங்கரம்… அச்சத்தில் மக்கள்

    திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 35 வயதான இவர், கடந்த 22 ம் தேதி இரவு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிந்த நிலையில், எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    திண்டுக்கல் சிந்தலகுண்டு அடுத்துள்ள சாமியார்பட்டி மன்மதன், மருதீஸ்வரன் தேனியை சேர்ந்த மணிகண்டராஜன், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சங்கரபாண்டி மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    பாலியல் தொல்லை குற்றத்துக்கு துணி துவைக்கும் தண்டனையா? நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை!பாலியல் தொல்லை குற்றத்துக்கு துணி துவைக்கும் தண்டனையா? நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை!

    போலீஸிடம் இருந்து தப்ப முயற்சி

    போலீஸிடம் இருந்து தப்ப முயற்சி

    அவர்களில் மன்மதன் மட்டும் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்துள்ளார். இதில் விழுந்த வேகத்தில் மன்மதனின் காலில் முறிவு ஏற்பட்டது. மன்மதனை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதாக அண்மையில் கைது செய்யப்பட்ட தி.மு.க., பிரமுகர் இன்பராஜ் என்பவரை போலீசில் காட்டிக் கொடுத்ததற்காக ஸ்டீபன் கொல்லப்பட்டது தெரியவந்தது.

    போலி மது விற்பனை

    போலி மது விற்பனை

    ஆரம்பத்தில் இன்பராஜின் கூட்டாளியாக செயல்பட்டு வந்த ஸ்டீபன், போலி மது விற்பனையில் முறைகேடு செய்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஸ்டீபனை வெளியேற்றிவிட்டு இன்பராஜ் தனது ஆதரவாளர்களான மன்மதன், சக்திவேல் உள்ளிட்டோரை வைத்து போலி மது தயாரிப்பை ரகசியமாக நடத்தி வந்துள்ளார்.

    போலி மதுபான விற்பனை

    போலி மதுபான விற்பனை

    கடந்த 22 ம் தேதி காலையில், போலீசார் இன்பராஜுக்கு சொந்தமான தோட்டத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு, 11 ஆயிரம் போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இன்பராஜ் உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்டீபன் தான் போலீசுக்கு துப்பு கொடுத்தது என தகவல் கிடைத்ததால் அன்று மாலையே ஸ்டீபனை மது அருந்த அழைத்துச் சென்ற இன்பராஜின் ஆதரவாளர்களான மன்மதன் தலைமையிலான கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி, தலையை மட்டும் துண்டித்து அனுமந்தராயன் கோட்டை பஸ் ஸ்டாப்பில் நடுரோட்டில் போட்டுவிட்டுச் சென்றதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளது.

    தேடும் போலீஸ்

    தேடும் போலீஸ்

    மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த வசீம் அக்ரம் கொல்லப்பட்டதை போல போலி மது விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் ஸ்டீபன் கூலிப்படையால் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    6 were arrested in connection with youth murder in Dindigul.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X