திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சி வழக்கு.. மாணவர்கள் போராட்டம் எதிரொலி.. பல்வேறு கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் எல்லோரையும் கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குற்றவாளிகளை சுட்டுக் கொல்லுங்க.. கொந்தளித்த கல்லூரி மாணவிகள்

    பழனி: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் எல்லோரையும் கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே புரட்டி போட்டு உள்ளது. நாளுக்கு நாள் இது குறித்து வெளியாகும் உண்மைகள் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Pollachi Gang Rape Case: Lots colleges announces holiday after a huge students protest

    பொள்ளாச்சி பாலியல் குற்றங்களை கண்டித்து தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு கல்லூரி மாணவிகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி மட்டுமில்லாமல் பல்வேறு ஊர்களில் இந்த போராட்டம் நடக்கிறது.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, பழனி, நெல்லை, மன்னார்குடி என்று பல பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இது தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி , உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    கல்லூரி நிர்வாகமே பல்வேறு இடங்களில் தானாக முடிவெடுத்து இந்த விடுமுறையை அறிவித்து இருக்கிறது.

    English summary
    Pollachi Gang Rape Case: Lots colleges announces holiday after a huge students protest in Pollachi and surroundings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X