திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகோ துணிக் கடை வச்சிருக்கார் போல.. வியாபாரம் ஆகாத துணிகளால் கருப்பு கொடி காட்டுகிறார்- எஸ் வி சேகர்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: வைகோ ஏதேனும் துணிக்கடை வைத்திருப்பார். அங்கு விற்பனை ஆகாத துணிகளை கருப்புக்கொடி காட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார் என்று எஸ்வி சேகர் பழனியில் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறியதாவது.: தமிழகத்தில் அதிக வருமானம் வரக்கூடிய கோயில்களில் முதன்மையானது பழனி மலைக் கோவிலாகும்.

அதேபோல் ஆக்கிரமிப்பும் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கடவுள்‌ இல்லை எனக் கூறும் கட்சிகள் தென் தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு செய்யும் மக்களிடம் சென்று கடவுள் இல்லை என கூறிவிட்டு திரும்ப வரமுடியுமா?

சொகுசு காரில்

சொகுசு காரில்

இந்து மதத்தை பழித்து அரசியல் செய்யும் எந்த கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. மேலும், கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கி மக்கள் பணி ஆற்றிய காலம் போய், தற்போது சொகுசு காரில் வந்துசெல்லும் அளவு வசதி எப்படி வந்தது?

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

அவர்களும் காசுபண்ண‌ தெரிந்த சராசரி அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிவைக்க வேண்டும் என்று சொல்லும் மற்ற கட்சிகளின் கருத்தை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு, தற்போது கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் இடைத்தேர்தல் காரணமாக கிடைக்கப் பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

பயன்படுத்துதல்

பயன்படுத்துதல்

தேர்தலை தள்ளிவைப்பதில் தவறில்லை. மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்ட போவதாக அறிவித்திருக்கும் வைகோவின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது. வைகோ ஏதேனும் துணிக்கடை வைத்திருப்பார். அங்கு விற்பனை ஆகாத துணிகளை கருப்புக்கொடி காட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார்.

சாதகம்

சாதகம்

கேரள முதல்வர் பினராய் விஜயன் செய்துவரும் அரசியல் மிகவும் கீழ்த்தரமான அரசியல், மதவெறி அரசியல். மேலும் கேரளாவில் நடைபெற்று வரும் ஆட்சியானது கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.

விமான நிலையம்

விமான நிலையம்

இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் இடையே நடைபெற்று வரும் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்காமல் சபரிமலை பிரச்சனை மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கேரளாவில் விமான நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒரு கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இடம்.

சாதகம்

சாதகம்

அந்த கிறிஸ்தவ அமைப்பினரிடமிருந்து ரூ.50,000 கோடி கேரள முதல்வர் பினராய் விஜயன் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக குரலெழுப்பி வருகிறார் என்று எஸ் வி சேகர் தெரிவித்தார்.

English summary
S.Ve. Shekher criticises Vaiko for his comment to show black flag against Modi visit to TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X