திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மன்சூர் அலிகான் கேக்கற கேள்விக்கு எவன்கிட்டயும் பதில் இருக்காது.. ஒரு பய தப்பிக்க முடியாது.. சீமான்

மன்சூரலிகானுக்காக திண்டுக்கல்லில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: "எதுக்குமே பயப்படாத மன்சூர் அலிகானை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். இவர் ஒருத்தர் போதும்.. அங்கிருப்பவர்களை ஓட ஓட விரட்டுவதற்கு" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூன் அலிகானும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் சங்கிலி பாண்டியனும் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்காக சீமான் திண்டுக்கல் வந்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது:

"மக்களாகிய நீங்கள் எல்லாத்திலயும் புதுசாவே தேடறீங்க. ஆடையில் புதுசு. சினிமாவில் புதுசு. ஆனா அரசியலில் மட்டும் ஏன் பழையசையே பிடிச்சு தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அதிலயும் புதுசா தேடுங்க. புதுசுலயும் தரமானதை தேடுங்க.

இதோ வர்றேன்.. இருங்கடி.. உங்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி தேர்தல்.. மாத்தறேன்.. மன்சூர் கோபாவேசம் இதோ வர்றேன்.. இருங்கடி.. உங்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி தேர்தல்.. மாத்தறேன்.. மன்சூர் கோபாவேசம்

எதுக்கு ஓட்டு?

எதுக்கு ஓட்டு?

இத்தனை வருஷம் காங்கிரஸ், இப்போ பாஜக... இங்க திமுக, அதிமுக... இதையெல்லாம் நாம் பார்த்துட்டோம். ஆனா என்ன செய்திருக்கின்றன? ஒன்னும் கிடையாது. அப்பறம் எதுக்கு அவங்களுக்கு திரும்பவும் வாய்ப்பு? ஒன்றே ஒன்று சொல்கிறோம்.. நாங்க ஆட்சிக்கு வந்தால் விவசாயத்தை அரசு தொழிலாக்குவோம். 58 வயசு ஆச்சா.. அந்த விவசாயிக்கு ஓய்வூதியம் தருவோம்.

கேரள அரசியல்

கேரள அரசியல்

புதிய சமுதாயம் அமைய நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கேரளாவில் ஓட்டுக்குக் காசு கொடுத்தால் விரட்டி விரட்டி அடிக்கிறாங்க.. கொன்றேபுடுவான்.. அவங்க தெளிவா அரசியல் பேசறாங்க.. அவங்களுக்கு அரசியல் என்பது வாழ்வியல் போல இருக்கு. ஆனா இங்கே காசு கொடுக்கவில்லை என்றால் அடிக்கிறாங்க. அரசியல் பேசினா வேற்று கிரக மனுஷனை போல பாக்கறாங்க.

மன்சூரலிகான்

மன்சூரலிகான்

இந்த நிலை மாற வேண்டும். தேர்தல் என்பது வாக்கை விற்பனை செய்யும் சந்தை இல்லை. எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிற சிந்தை. இன்னைக்கு சினிமாவில இருக்கிறவங்கள்ல மக்களுக்காக போராடி சிறைக்கு சென்றது மன்சூரலிகான். ஒருமுறை என்னை கைது செய்யக்கூடாதுன்னு போராடிட்டு, கடைசியில் அவரை கைது செய்து கூட்டிட்டு போட்யிட்டாங்க. என்னை விட்டுட்டாங்க வெளியில.

ஒருத்தர் போதும்

சமரசமே இல்லாத போராட்டக்காரர் மன்சூரலிகான். அவர் கேக்கற கேள்விக்கு எவன்கிட்டயும் பதில் இருக்காது. ஒரு பய தப்பிக்க முடியாது. எதுக்குமே பயப்படாத மன்சூர் அலிகானை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். இவர் ஒருத்தர் போதும்.. அங்கிருப்பவர்களை ஓட ஓட விரட்டுவதற்கு''என்றார்.

English summary
Seeman collected votes in Dindigul for Mansoor Ali Khan. He boasted that Mansoor Ali Khan was not afraid of anything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X