திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை ஜாஸ்தியாம்.. சின்ன வெங்காயம் கிலோ 45 ரூபாயாம்!

திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காய விலை உயர்ந்து காணப்படுகிறது.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ரம்ஜான் வரப்போகுதுல்ல.. அதனால திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை ஜாஸ்தியா இருக்காம்.. அதிலும் சின்ன வெங்காயம் கிலோ 45 ரூபாயாம்!

திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் வெங்காய மார்க்கெட் உள்ளது. இங்குதான் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வெங்காயம் வந்து இறங்கும். பிறகு தரம் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப வைக்கப்படும். இதுதான் வழக்கமாக நடப்பது!

Small Onion Price Hike in Dindigul market

ஆனால் சில வாரங்களாக உள்ளூரிலேயே வெங்காய வரத்து குறைந்துவிட்டதாம். இதனால் திருப்பூர், அவினாசி பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் வெங்காயம் வந்து இறங்குகிறது. அதிலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.45 வரை கொள்முதல் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். பெரிய வெங்காயம் பரவாயில்லை.. கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5பேர் பலி.. எடப்பாடிக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கைமதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5பேர் பலி.. எடப்பாடிக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை

இதே போல் பெரம்பலூர், நாமக்கல், பகுதிகளிலிருந்தும் அதிக அளவு வெங்காயம் வரவழைக்கப்படுகிறதாம். இப்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் அதற்கு வெங்காயம் நிறைய தேவைப்படுகிறதாம்.

சின்ன வெங்காயம் விலையை கேட்டவுடன் சிலர் ஓடினாலும், விலை அதிகமாக வைத்து விற்பதால் விவசாயிகள் செம குஷியில் உள்ளனர்.

English summary
Demand for Small Onion Price Hike in Dindigul market due to Ramzan Festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X