திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுமையான ஆட்சி... சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் கிடையாது.. கொடையில் ஸ்டாலின் கட் அண்ட் ரைட்..!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் உறவினர் உள்ளிட்ட யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்பதில் கட் அண்ட் ரைட்டாக இருக்கிறார் ஸ்டாலின்.மொத்தத்தில் தனது தலைமையிலான அரசு புதுமையான முறையில் செயல்பட வேண்டும் என விரும்பும் ஸ்டாலின், தனது வேகத்திற்கு ஈடுகொடுக்க கூடியவர்களை மட்டுமே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் கொண்டு வர இருக்கிறார்.

Stalin plan, There is no compromise on law and order

அங்கு திமுக அமைச்சரவை பற்றி அவர் விவாதித்து பட்டியல் தயார் செய்ததாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மற்றொரு முக்கியமான விவகாரம் பற்றியும் அவர் அங்கு ஆலோசித்திருக்கிறார்.

அதாவது கடந்த கால திமுக ஆட்சி மீதான இமேஜை இந்த முறை அடியோடு மாற்ற வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருக்கிறார். இதனால் அரசு நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் குடும்ப மற்றும் உறவுகளின் தலையீட்டை இந்த முறை தூரமாக ஒதுக்கி வைக்க விரும்புகிறார்.

அதற்கேற்றார் போல் இப்போதே அது குறித்த தனது எண்ணவோட்டத்தையும் குடும்ப உறவுகள் மத்தியில் ஸ்டாலின் வெளிப்படுத்திவிட்டார். இதுமட்டுமல்லாமல் கட்சியில் எவ்வளவு பெரிய சீனியர்களாக இருந்தாலும் சரி அவர்களால் ஆட்சிக்கு இழுக்கு ஏற்படும் நிகழ்வு நடந்தால் அவர்களை ஒதுக்கி வைக்கவும் தாம் தயாராக இருப்பதையும் ஸ்டாலின் உணர்த்திவிட்டார்.

மொத்தத்தில் தனது தலைமையிலான அரசு புதுமையான முறையில் செயல்பட வேண்டும் என விரும்பும் ஸ்டாலின், தனது வேகத்திற்கு ஈடுகொடுக்க கூடியவர்களை மட்டுமே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் கொண்டு வர இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாக இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருந்தாலும், திமுக தான் ஆட்சி அமைக்கும் என்பதில் உறுதியாக உள்ள ஸ்டாலின் அதற்கான முன்னேற்பாடுகளை பக்காவாக செய்து வருகிறார்.

English summary
Stalin plan, There is no compromise on law and order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X