திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரச்சாரத்தை முடித்த கையோடு கொடைக்கானலுக்குப் பறந்தார் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

கொடைக்கானல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை இடைத்தேர்தலுக்காக இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்.

தொகுதிக்கு தலா 2 நாட்கள் வீதம் 8 நாட்கள் பிரச்சாரம் செய்தார். அரவக்குறிச்சியில் நேற்றிரவு பிரச்சாரத்தை முடித்த கையோடு கொடைக்கானல் சென்றுள்ளார் ஸ்டாலின். அங்கு ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு சென்னை திரும்புகிறார்.

Stalin takes rest in Kodaikanal

மீண்டும் 14-ம் தேதி இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளதால் அதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்வதற்காக கொடைக்கானல் சென்றாராம் ஸ்டாலின். கொடைக்கானல் டூர் பயணத்திட்டத்தில் இல்லையாம், திடீரென்று முடிவெடுத்து சென்றது தானாம்.

சென்னையில் மகன், மருமகள், மகள், மருமகன், பேரக்குழந்தைகள் யாரும் இல்லை. எல்லோரும் கோடைவிடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளார்கள். பேரக்குழந்தைகள் சென்னையில் இல்லாத போது அவசரமாக அங்கு சென்று என்ன செய்யப்போகிறோம் எனப் பேசி, ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் கொடைக்கானல் செல்லலாம் என முடிவெடுத்தார்களாம்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா... மு.க. ஸ்டாலின் கேள்வி ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா... மு.க. ஸ்டாலின் கேள்வி

கொடைக்கானலில் தனது மனைவியுடன் படகு சவாரி செய்து ஓய்வெடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அங்கு கட்சிக்காரர்களை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையாம். கொடைக்கானலுக்கு வந்த ஸ்டாலின் தம்பதியை, திண்டுக்கல் மாவட்ட எல்லையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

English summary
DMK president MK Stalin is camping in Kodaikanal with his wife Durga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X