திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவரை அரஸ்ட் பண்ணுங்க.. பிரபல டிக்டாக் லயா தர்மராஜ் குடும்பத்தோடு திண்டுக்கல் எஸ்பி ஆபிஸில் தர்ணா

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : பிரபல டிக்டாக் லயா தர்மராஜ் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார். தங்கையின் கணவனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    அவரை அரஸ்ட் பண்ணுங்க.. பிரபல டிக்டாக் லயா தர்மராஜ் குடும்பத்தோடு திண்டுக்கல் எஸ்பி ஆபிஸில் தர்ணா

    திண்டுக்கல் அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன்( வயது 31) இவருக்கும் திவ்யா (29) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் திவ்யாவின் கணவர் ராஜேஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு படிக்க சென்ற இடத்தில் உடன் படித்த வடமதுரை அருகே உள்ள அய்யலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரின் மனைவி நாகராணி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

     வியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

    திவ்யா புகார்

    திவ்யா புகார்

    இதுபற்றி தகவல் அறிந்த திவ்யாவிற்கும் ராஜேஷ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இதையடுத்து தனது கணவர் ராஜேஸ்வரன் படிக்க சென்ற இடத்தில் வடமதுரை சேர்ந்த நாகராணி என்பவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார்.

    கணவர் புகார்

    கணவர் புகார்

    இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த ராஜேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராணியுடன் சேர்ந்து வசித்து வருவதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த நாகராணியின் கணவர் ராஜேஷ் கண்ணன் தனது மனைவியை மீட்டு தர வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    குடும்பத்துடன் தர்ணா

    குடும்பத்துடன் தர்ணா

    இதனிடையே பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரனின் மனைவி திவ்யா அவரின் அக்கா சமூக ஆர்வலர் லயா தர்மராஜ் மற்றும் பெற்றோர் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

    போலீசார் சமாதானம்

    போலீசார் சமாதானம்

    தன்னை கொடுமைப்படுத்தி வரதட்சணை கேட்டு துன்புறுத்திய தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வருவதால் அவரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திவ்யா போலீசாரிடம் கோரினார். அவருடன் அவரது அக்கா லயா தர்மராஜூம் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து ராஜேஸ்வரன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

    English summary
    Famous tik tok Laya Dharmaraj with her family staged a protest in front of the Dindigul District Superintendent of Police's office. She fought to have her sister's husband arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X