திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏம்மா.. இன்னுமா பெயர் வைக்கலை.. பாப்பா உன் பேர் என்ன.. சோபிகா.. உதயநிதி பிரச்சாரத்தில் கலகல!

திண்டுக்கல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Udhyanidhi Stalin campaign: உதயநிதியின் கல கல பிரச்சாரம்..சிரித்த தொண்டர்கள்,மக்கள்- வீடியோ

    திண்டுக்கல்: "ஏம்மா.. இன்னுமா உன் குழந்தைக்கு பேர் வைக்கல? பாப்பா.. உன் பேர் என்னம்மா?" என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் கலகலப்பு சம்பவம் ஒன்று நடந்தது!

    இன்னும் 3 நாள்தான் இருக்கிறது பிரச்சாரம் முடிய. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

    கலைஞர் பேரன் என்பதாலும், முக ஸ்டாலின் மகன் என்பதாலும், திரைப்பட நடிகர் என்பதாலும் உதயநிதியை பார்க்க இளசுகள் கூட்டம் நிறையவே தென்படுகிறது.

    நீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம் நீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம்

    குழந்தை

    குழந்தை

    இந்நிலையில், திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் உதயநிதி வேனில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி கொண்டு வேன் அருகில் வந்தார். குழந்தைக்கு பெயர் வைக்கும்படி, குழந்தையை வேனில் இருந்த உதயநிதியிடம் தந்தார்.

    பெயர் வைக்கல?

    பெயர் வைக்கல?

    ஆனால் அந்த குழந்தைக்கு 2 வயதுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. அந்த குழந்தையை தூக்கி கொண்ட உதயநிதி ஸ்டாலின், "ஏம்மா.. இன்னுமா இந்த குழந்தைக்கு பேர் வைக்கல?" என்று கேட்டு சிரித்தார்.

    உங்கள் லோக்சபா தொகுதி.. என்ன சிறப்பு தெரியுமா? சுவாரசிய தகவல்கள்!

    சோபிகா

    சோபிகா

    பிறகு அந்த குழந்தையிடமே, "பாப்பா.. உன் பேர் என்னம்மா?" என்று கேட்டார். அதற்கு குழந்தை ‘சோபிகா' என்று அழகாகவும் தெளிவாகவும் சொன்னது. உதயநிதி கையில் வைத்திருந்த அந்த மைக்கில் குழந்தையே தன் வாயால் பெயரை சொன்னது அந்த பகுதி முழுக்க ஒலித்தது.

    இதுவே நல்லாயிருக்கு

    இதுவே நல்லாயிருக்கு

    உடனே உதயநிதி உட்பட அங்கிருந்த எல்லோருமே விழுந்து விழுந்து சிரித்து விட்டார்கள். பிறகு உதயநிதி, "சோபிகா.. இந்த பெயரே உனக்கு நல்லா இருக்கும்மா, வேற பேர் வேணாம்" என்று சொல்லி குழந்தையை தாயிடம் தந்தார்!

    English summary
    Udhyanidhi Stalin campaigned Sandhapettai in Dindigul Constitution and Name for Volunteers female baby
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X