திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணே தெரியலை.. அப்பிய புகை.. காட்டு தீயில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள்.. அனலில் கொடைக்கானல்!

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: என்ன காரணம் என்றே தெரியவில்லை.. கொடைக்கானல் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. மிக வேகமாக வனப்பகுதி முழுவதும் நேற்றில் இருந்து இந்த பரவி வருவதுடன் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பதற்கு அன்று அமேசான் காடு எரிந்ததை போலவே உள்ளது!!

Recommended Video

    கண்ணே தெரியலை.. அப்பிய புகை.. காட்டு தீயில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள்.. அனலில் கொடைக்கானல்! - வீடியோ

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று மலைகளின் அரசி கொடைக்கானல்.. இங்கு கோவில்பட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ திடீரென பரவி வருகிறது.

    இந்த காட்டுத்தீயானது வனப்பகுதியின்அருகில் இருக்கும் தனியார் வருவாய் நிலத்தில்தான் ஏற்பட்டுள்ளது... பின் இது மெல்ல தோட்டங்களுக்கும்.. கடைசியில் காட்டுப்பகுதிக்கும் பரவியுள்ளது.

    அரிய வகை

    அரிய வகை

    இந்த காட்டுப்பகுதியில்தான் ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளன.. இந்த மூலிகை மரங்களும், செடிகளும் மிக மிக அரிதாக கிடைப்பவையாகும்.. இந்த மூலிகை மரங்கள் மொத்தமாக கருகிவிட்டன... அதேபோல இக்காடுகளில் உயிர் வாழும் வன விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதுதான் பெருத்த அதிர்ச்சி ஆகும். நேற்று மதியானத்தில் இருந்து இந்த தீயின் வேகம் அதிகமாகிவிட்டது.

    மூச்சுதிணறல்

    மூச்சுதிணறல்

    இதனால் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது... இதனால் மலைக்கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.. இந்த தீ பரவ என்ன காரணம் என தெரியவில்லை.. ஆனால் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது.. அந்த காட்டில் இருந்த விலங்குகள்கூட சாப்பாடு, தண்ணீர் தேடி ஊருக்குள்தான் வந்துபோகின்றன.. அந்த வகையில் அவை எல்லாம் எங்கே என இன்னும் தெரியவில்லை.

    காட்டுத்தீ

    காட்டுத்தீ

    கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே இப்படி காட்டுத் தீ பரவுவது இயல்புதான் என்றாலும், அரிய மூலிகை மரங்கள், செடிகள் கருகியதை நினைத்து கிராம மக்கள் கலங்குகிறார்கள்.. தீப்பற்றி எரிகிற இடம், ஆட்கள் செல்ல முடியாத பகுதி ஆகும். அதனால் காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் அங்கு வரவேயில்லை.

    நவீன கருவிகள்

    நவீன கருவிகள்

    தொடர்ந்து அங்கு தீ எரிந்து கொண்டிருக்கிறது. தானாக அணைந்தால் மட்டுமே இந்த காட்டுத்தீ முடிவுக்கு வரும் என்ற சூழல் உள்ளது.. இது ஒரு பெரிய கொடுமை ஆகும்.. உயிருள்ள வனவிலங்குகள், அரியவகை மூலிகை, மரம், செடிகளை கூட நம்மால் உடனடியாக காப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது... இப்படி கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய உடனடி எதிர்பார்ப்பாகும்!

    English summary
    wildfire is spreading near kodaikanal and Rare herb trees have been burnt by this forest fire
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X