திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடைக்கானலுக்கு போறீங்களா.. அதுவும் பஸ்ல போறீங்களா.. அப்ப இ பாஸே தேவையில்லை!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பேருந்துகளில் இ பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம் என மாவட்ட சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 144 தடையுத்தரவு கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை போடப்பட்டது. பின்னர் மே மாதம் முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பூங்காக்கள், கோயில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இதனால் மக்கள் கடந்த 6 மாதங்களாக எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

வாங்க! பாஜகவில் இணைந்துவிடுங்கள்.. நிறைய சாதிக்கலாம்.. சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக பிரமுகர்வாங்க! பாஜகவில் இணைந்துவிடுங்கள்.. நிறைய சாதிக்கலாம்.. சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக பிரமுகர்

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தற்போது 8 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஏற்காடு, நீலகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு இ பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும் என உத்தரவிடப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுற்றுலா

சுற்றுலா

வார இறுதி நாட்களில் ரிலாக்ஸ் செய்ய சுற்றுலா செல்ல முடியாமல் தவித்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கும் பிரியர்களுக்கும் ஆறுதலை தந்தது. இதனால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நாளே ஏற்காடு மலையடிவாரத்தில் கடும் கூட்டம் நிலவியது.

போலீஸார் அனுமதி

போலீஸார் அனுமதி

இவர்களில் பெரும்பாலானவர்கள் இ பாஸ் இல்லாமல் வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீஸார் இ பாஸ் இல்லாமல் வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இ பாஸுடன் வருமாறு போலீஸார் அறிவுறுத்தி அனுப்பியதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர்.

சார் ஆட்சியர் தகவல்

சார் ஆட்சியர் தகவல்

இந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பொது போக்குவரத்து பேருந்துகளில் இ பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம் என திண்டுக்கல் மாவட்ட சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். வெள்ளி நீர் வீழ்ச்சி பூங்காவில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படும். படிப்படியாக அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படும் என்றார்.

English summary
Dindigul Sub Collector Sivaguru Prabhakaran says that tourists who come to Kodaikkanal through bus can come without E pass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X