திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தற்கொலைனு நிரூபிக்கவே வீடியோ.. இளம்பெண்ணின் மைத்துநர் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனது குடும்பத்தினரிடம் தகராறு செய்த பெண் தீக்குளிப்பு சம்பவம் கொலை அல்ல, தற்கொலை என நிரூபிக்கவே வீடியோ எடுத்ததாக அந்த பெண்ணை ஏமாற்றியவரின் அண்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு அருகே உள்ள கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். டிரைவராக உள்ளார். இவர் மாலதி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரிகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக் காட்டில் சதீஷ்க்கு அவரது பெற்றோர்களால் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் இளம் பெண் தீக்குளிப்பு சம்பவம்.. அசைக்காமல் வீடியோ எடுத்த மைத்துனர் கைது திண்டுக்கல் இளம் பெண் தீக்குளிப்பு சம்பவம்.. அசைக்காமல் வீடியோ எடுத்த மைத்துனர் கைது

3 வயது குழந்தை

3 வயது குழந்தை

இதுகுறித்து தகவலறிந்த மாலதி, பண்ணைக்காட்டில் உள்ள தனது கணவன் வீட்டில் நியாயம் கேட்க சென்றார். அப்போது அவரை சதீஷின் உறவினர்கள் அடித்து துன்புறுத்திய அசிங்கமாக பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது. தனது நிலையையும் தனது 3 வயது குழந்தையின் நிலையையும் எவ்வளோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

கடைக்காரர்

கடைக்காரர்

இதனால் அழுது கொண்டே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு சாலையோர டீக்கடைக்கு சென்றார் மாலதி. அங்கு குழந்தையை உட்கார வைத்துவிட்டு தனது உடலில் பெட்ரோல் ஊற்றினார். பின்னர் கடைக்காரரிடம் தீப்பெட்டி வாங்கினார். இத்தனை சம்பவங்களையும் யாரும் தடுக்கவில்லை.

வீடியோ எடுத்தவர்

வீடியோ எடுத்தவர்

பின்னர் தீவைத்துக் கொண்டு உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். சின்னஞ்சிறிய குழந்தையை விட்டுவிட்டு ஒரு பெண் தீக்குளிக்கிறார், அதை தடுக்க மனமில்லாமல் வீடியோ எடுக்கிறார் என அவருக்கு கண்டனங்கள் வலுத்தன.

வீடியோ எடுத்தவர் சதீஷின் அண்ணன்

வீடியோ எடுத்தவர் சதீஷின் அண்ணன்

இந்த நிலையில் போலீஸார் வீடியோ எடுத்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மாலதியை ஏமாற்றிய சதீஷின் அண்ணன் சரவணக்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் , ஒரு பெண் தீக்குளிப்பதை தடுக்காமல் வீடியோ எடுத்தது மனித செயலா? அங்கு அமரவைக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டும் மனமிறங்கவில்லையா? என கேட்டனர்.

தற்கொலைனு நிரூபிக்க

தற்கொலைனு நிரூபிக்க

அதற்கு அவர் இந்த பெண் இறந்த சம்பவம் கொலை இல்லை. தற்கொலை என நிரூபிக்கவே நான் வீடியோ எடுத்தேன் என பகீர் காரணத்தை தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண் முன்னே ஒரு உயிர் போவதை இந்த சரவணக்குமார் எப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தாரோ!

English summary
Youth who arrested in Dindidul incident says that he wants to prove the immolation incident is a suicide not a murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X