For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு உதவுங்கள்.. கரம் கொடுக்கும் Save the Children அமைப்பு!

சென்னை: தீபாவளி திருநாளில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு நீங்களும் உதவலாம்.

ஒவ்வொருமுறை போஷாக்கற்ற குழந்தைகளை கடந்து வரும் போதும் நம்முடைய மனதில் பல எண்ணங்கள் ஓடும். இந்த குழந்தையின் வீட்டில் உணவு இருக்காது, வறுமையான குடும்பம், போதிய சாப்பாடு இல்லை என்று பல விஷயங்கள் நம்முடைய மனதில் ஓடும். இந்தியாவில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்படும் குழந்தைகள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

ஊட்டச்சத்து குறைவிற்கு போதிய உணவு இல்லாதது, கிடைக்கும் உணவிலும் போதிய சத்து இல்லாதது என்று இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணங்கள்

1. இந்தியாவில் கார்போஹைட்ரேட் உணவு உண்ணப்படுகிறது: நாம் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொண்டு புரோட்டின், கொழுப்பு, விட்டமின் உணவுகளை எடுப்பது இல்லை. நம்முடைய ஊட்டச்சத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவ கூடிய உணவுகளை நாம் எடுப்பது இல்லை. சமமான ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை நாம் எடுப்பது இல்லை என்பதே இதற்கு முதல் காரணம்.

2. தாய்வழி ஆரோக்கியம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் போதிய உணவு எடுக்காதது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாதது, கூடுதல் உடல் எடை, மோசமான பிஎம்ஐ ஆகியவை கூட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவோடு பிறக்க முக்கிய காரணம் ஆகும். இதனால் குழந்தை பிறக்கும் போதே குறைந்த எடையுடன் பிறக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறைவாக சாப்பிடுவதும் கூட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவாக பிறக்க முக்கிய காரணம் ஆகும்.

3. சுத்தமின்மை: இந்தியாவில் இன்னும் 50% மக்கள் வெளிப்புறத்தில்தான் மலம் கழிக்கிறார்கள். இன்னும் பலர் கழிப்பிட வசதி இல்லாமல் இருக்கிறார். இதனால் பலருக்கு குடல் ரீதியாகவும், சிறுநீரக ரீதியாகவும் நாள்பட்ட தொற்றுகள் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளில் குடலில் இருக்கும் சத்து உறியும் திறன் குறைந்து போகிறது. இதனால் ஊட்டச்சத்துக் குறைந்து பலருக்கு டயேரியா போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் எல்லா வருடமும் 117000 குழந்தைகள் டயேரியா காரணமாக பலியாகிறார்கள்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பின் பங்களிப்பு:

i. Severe Acute Malnutrition (SAM) போன்ற குறைபாட்டை களைய ராஜஸ்தானின் டோங்கில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சை மையம் போன்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ii. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பிரச்சாரம்: ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து மறுவாழ்வு கூட்டங்களை நடத்துவது. தாய்மார்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் குடும்பங்களுக்கான போதிய ரிசோர்ஸ்களை அளிப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

iii. பள்ளி பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி உதவியுடன் போஷன் வாட்டிக்கா (nutrition garden) எனப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தயாரித்து அதை சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு குழந்தைகளின் மதிய உணவில் அளிக்கிறது.

iv. நீர், தூய்மை, கழிவு மேலாண்மை (Water, Sanitation and Hygiene - WASH) திட்டங்கள் மூலம் பள்ளிகள் மற்றும் வீடுகளுக்கு போதிய கழிப்பறை தண்ணீர் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது. இதன் மூலம் பொது இடங்களில் கழிப்பது கட்டுப்படுத்தப்படும். இதன் காரணமாக டயேரியா ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்டும். இந்த அமைப்பு மூலம் 'Toilet User Groups' என்ற குழு உருவாக்கப்பட்டு கழிப்பறைகளை கட்ட நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

நீங்களும் உதவலாம்!

இந்த தீபாவளி திருநாளில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு நீங்களும் உதவலாம்.

ஒரே ஒரு பிளேட் உணவை நீங்கள் இவர்களுக்கு அளித்தும் கூட ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக போராட முடியும். இந்த சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் ஊட்டச்சத்து குறைப்பாடு குழந்தைகளுக்கு எப்படி உதவுவது என்று இந்த லிங்கை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. ஊட்டச்சத்து குறைப்பாடு குழந்தைகளுக்கு உதவ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X