துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரபரப்பான ஐபிஎல் பைனல்.. திடீரென ரசிகர் கூட்டத்தில் எழுந்த பதாகை.. அதிர்ந்து போன பாஜக ஆதரவாளர்கள்

Google Oneindia Tamil News

துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் பைனல் போட்டியின்போது ஒத்த ஓட்டு பாஜக என்று திமுக ஆதரவாளர் ஒருவர் பதாகையில் எழுதி ஏந்தி காட்டினார்.

சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, கோவை மாவட்டத்திற்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியிருந்தது. பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இங்கு திமுகவின் அருள்ராஜ், அதிமுகவின் வைத்தியலிங்கம், தேமுதிகவின் ரவிக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். பாஜகவின் கார்த்திக் சுயேட்சையாக போட்டியிட்டார். அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார்.

குலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிய குவியும் பக்தர்கள் - கொடியேற்றம், சூரசம்ஹாரம் காணத் தடைகுலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிய குவியும் பக்தர்கள் - கொடியேற்றம், சூரசம்ஹாரம் காணத் தடை

பாஜக ஒரு ஓட்டு

பாஜக ஒரு ஓட்டு


இதையடுத்து, திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும். சுயேட்சையாக போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் 1 வாக்கையும் பெற்றுள்ளனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார்.
ஒரே ஒரு வாக்கு வாங்கி பாஜக நிர்வாகி தோல்வி அடைநத்தை திமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றன.

குடும்பம் ஓட்டு

குடும்பம் ஓட்டு

பாஜக நிர்வாகி கார்த்திக் குடும்பத்தில் 5 பேர் உள்ள நிலையில் அவர்கள் கூட ஓட்டுப்போடவில்லை என்று திமுகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள கார்த்தி, 4வது வார்டில் தான் என் குடும்பத்திற்கு வாக்கு உள்ளது. நான் போட்டியிட்ட 9வது வார்டில் என் குடும்பத்திற்கு வாக்கு இல்லை. தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறவில்லை. பணநாயகம் வென்றது என்று கூறியுள்ளார்.

ஒத்த ஓட்டு பாஜக

ஒத்த ஓட்டு பாஜக

பாஜகவைச் சேர்ந்தவர் கார்த்திக் என்பதால், ஒத்த ஓட்டு பாஜக என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் மீம்கள் சுற்றி வந்தன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் இந்த ஹேஷ்டேக்கில் பாஜகவை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டனர்.

Recommended Video

    CSK வெற்றிக்கு வாழ்த்திய Gambhir.. ஆனா அதிலும் கூட வன்மம்.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்
    துபாய் மைதானம்

    துபாய் மைதானம்

    இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த, பரம்பொருள் என்ற பெயருடன் ட்விட்டரில் இயங்கும் திமுக ஆதரவாளர், ஒத்த ஓட்டு பாஜக என்று ஒரு பேப்பரில் எழுதி காண்பித்தார். இதை பலரும் சோஷியல் மீடியாக்களில், ஷேர் செய்தனர். இது பாஜகவினரை நெளிய வைத்துள்ளது.

     முதல்வருக்கு பாராட்டு

    முதல்வருக்கு பாராட்டு

    இதனிடையே, முதல்வர் ஸ்டாலினின், அறிவிப்பான 'டவுன் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம்' என்ற திட்டத்தை பாராட்டி, டி ஷர்ட்டில் எழுதி, மைதானத்திற்குள் ஒரு இளைஞர் காண்பித்தார். அதுவும் கேமராக்களில் பதிவானது. "பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்யும் திட்டத்திற்காக நன்றி முதல்வர் ஸ்டாலின் அவர்களே" என்று அவர் எழுதியிருந்தார்.

    English summary
    During the IPL final match held at the Dubai International Stadium yesterday, a DMK supporter wrote and carried a banner saying that Otha vote BJP (ஒத்த ஓட்டு பாஜக).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X