துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுனை பயன் உள்ளதாக மாற்ற செம வழி.. ஆன்லைன் சுற்றுலாவில் கலக்கும் அபுதாபியின் #StayCurious

Google Oneindia Tamil News

அபுதாபி: ஆன்லைன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக ஐக்கிய அரசு அமீரகத்தில் உள்ள அபுதாபியின் சுற்றுலாத்துறை #StayCurious என்ற தளத்தை உருவாக்கி உள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுக்க சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக உலக நாடுகள் இடையே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் பல மாதங்களுக்கு சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

Abu Dhabi tourism gives an opportunity for Virtual tour through StayCurious

இந்த நிலையில்தான் ஆன்லைன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக ஐக்கிய அரசு அமீரகத்தில் உள்ள அபுதாபியின் சுற்றுலாத்துறை #StayCurious என்ற தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் இணையத்திலேயே ஆன்லைன் வழியாக அபுதாபியில் உள்ள இடங்களை பார்க்க முடியும். அபுதாபியில் உள்ள அனைத்து முக்கியமான இடங்களையும் அதன் வரலாறையும் மிக எளிதாக இந்த தளம் மூலம் பார்க்க முடியும்.

இந்த தளத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளது.

Stay Adventurous: இந்த தளம் மூலம் அபுதாபியில் உள்ள முக்கிய இடங்கள், பிரபலமான பகுதிகள், அதன் வரலாறுகள் அனைத்தையும் இணையம் மூலமே சுற்றிப்பார்க்க முடியும்.

Stay Indulgent: இதன் மூலம் அபுதாபியில் உணவு முறைகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் அபுதாபியில் இருக்கும் பிரபலமான உணவுகளை சமைப்பது எப்படி என்றும் இதில் தெரிந்துகொள்ள முடியும்.

Stay Enlightened: இதன் மூலமாக அபுதாபியில் வழங்கப்படும் ஆன்லைன் கோர்ஸ்கள் பலவற்றை எளிதாக படிக்க முடியும். குரோ வித் கூகுள் (Grow with Google), கோர்ஸ்சேரா (Coursera), அமீரகத்தின் வரலாறு, மக்தபா டிஜிட்டல் நூலகம் (Maktaba Digital Library) ஆகிய படிப்புகளை படிக்க முடியும்.

Stay Creative: அபுதாபியின் கலாச்சார தளங்களை இந்த தளம் மூலம் மிக எளிமையாக பார்வையிட முடியும்.

Stay Entertained:அபுதாபியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளில் இதன் மூலம் கலந்து கொள்ள முடியும், இதன் மூலம் பார்வையிட முடியும்.

இது தொடர்பாக அபுதாபி சுற்றுலாத்துறையின் செயலாளர்களில் ஒருவரான சவூத் அல் ஹோசானி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலகம் பல சவால்களை சந்தித்து கொண்டு இருக்கும் நிலையில் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் அபுதாபி இறங்கி உள்ளது. மக்களை ஒருங்கிணைத்து அவர்களை அபுதாபி சுற்றுலாத்துறை உற்சாகப்படுத்த தொடங்கி உள்ளது. #StayCurious மூலம் மக்கள் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

#StayCurious குறித்து தெரிந்து கொள்ள www.staycurious.ae தளத்திற்கு சென்று பாருங்கள்... உங்கள் லாக் டவுன் நாட்களை பயன் உள்ளதாக மாற்றிடுங்கள்!

English summary
Abu Dhabi tourism gives an opportunity for Virtual tour through StayCurious Hub.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X