துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 வயது பூர்த்தி அடையாத மைனர்களுக்கு இனி தூக்கு தண்டனை கிடையாது.. சவுதி அரேபியா அடுத்த அதிரடி!

Google Oneindia Tamil News

ரியாத்: 18 வயது பூர்த்தி அடையாத மைனர்களுக்கு இனி சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படாது என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    சவுதி அரேபியாவில் இனிமேல் கசையடி தண்டனை கிடையாதா?

    சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த சில வருடங்களாக சவுதியில் நிறைய சீர்த்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேற்கத்திய கலாச்சாரத்துடன் நெருங்கும் வகையில், சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலும் சல்மான் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    After Flogging, Now Saudi Arabia abolishes the death sentences for Minors

    இதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கசையடி தண்டனைகளை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவில் பொதுவில் மக்கள் முன்னிலையில் தாக்கப்படும் தண்டனை முறைகளும் அமலில் உள்ளது. பொதுவாக கசையடி தண்டனை என்று இது அழைக்கப்படும்.

    இதை மொத்தமாக நிறுத்த போவதாக அரசு அறிவித்தது. இதற்கு பதிலாக சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 18 வயது பூர்த்தி அடையாத மைனர்களுக்கு இனி சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படாது என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தொடர் விமர்சனங்களை தொடர்ந்து அந்நாட்டு அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு பதிலாக இவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உடனடியாக இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

    வருமான வரியை அரசு உயர்த்த போகிறது.. வதந்தி பரப்பிய 3 ஐஆர்எஸ் அதிகாரிகள்.. பாய்ந்தது நடவடிக்கை!வருமான வரியை அரசு உயர்த்த போகிறது.. வதந்தி பரப்பிய 3 ஐஆர்எஸ் அதிகாரிகள்.. பாய்ந்தது நடவடிக்கை!

    இதனால் சவுதியில் தற்போது தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கும் ஏராளமான சிறுவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது . முக்கியமாக அரசு வசந்தத்தின் போது அரசுக்கு எதிராக போராடிய ஷியா பிரிவை சேர்ந்த 6 சிறுவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த வருடம் சவுதியில் பல்வேறு குற்றங்களை செய்த 16 வயது சிறுவன் ஒருவன் தூக்கில் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது பெரிய எதிர்ப்பலைகளை சந்தித்தது. இந்த நிலையில் அந்நாட்டு அரசு மைனர்களுக்கு தூக்கு தண்டனை கூடாது என்ற முடிவை எடுத்துள்ளது.

    English summary
    After Flogging, Now Saudi Arabia abolishes the death sentences for Minors in the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X