துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்

Google Oneindia Tamil News

துபாய்: சமூக வலைதளங்களில் தான் வைரலாக வேண்டும் என்ற வெறியில் சாலையில் ரூபாய் நோட்டுக்களை வீசி போஸ் கொடுத்து அதை சமூக வலைதளங்களில் போட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளப் பைத்தியம் நாட்டில் முற்றி விட்டது. எப்படி டிக்டாக் பைத்தியம் ஜாஸ்தியாக இருக்கிறதோ அதேபோல வைரலாக வேண்டும் என்ற பைத்தியமும் அதிகரித்தபடி உள்ளது.

Asian man arrested in Dubai for throwing currencies in public place

இந்த நிலையில் துபாயில் ஒரு இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் செய்த காரியம் ரொம்பக் கொடுமையானது. அவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நபர் பொது இடத்தில் அந்த நாட்டு கரன்சி நோட்டுக்களை அள்ளி வீசி அத்தனை பேரையும் அதிர வைத்தார். அதை புகைப்படமும் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டார். இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து என்ன ஏது என்று விசாரித்தனர். அதற்கு அந்த நபர் சொன்ன பதில்தான் காமெடியானது.

"ஜெய் ஸ்ரீராம்".. சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள்

அதாவது சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும், தனது செயல் வைரலாக வேண்டும். இதன் மூலம் தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தாராம் அந்த இளைஞர்.

இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது மாதிரியெல்லாம் சில்லறைத்தனமான புகழுக்காக செய்வதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று துபாய் பாதுகாப்பு துறை இயக்குநர் கர்னல் பைசல் அல் காசிம் கூறியுள்ளார்.

English summary
An Asian man has been arrested in Dubai for throwing currencies in public place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X