• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

2 நாள் ஐசியூவில் அட்மிட்.. நேராக அரையிறுதிக்கு வந்து அரை சதமும் விளாசிய வீரர்! என்ன ஒரு அர்ப்பணிப்பு

Google Oneindia Tamil News

துபாய்: ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நேற்று துபாயில் டி20 உலக கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது.

  Mohammad Rizwan: From ICU to World Cup 2021 semifinal | PAK vs AUS | OneIndia Tamil

  இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 176 ரன்களை எடுத்தது. இரண்டாவது பேட் செய்த ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தால் அபார வெற்றி பெற்றது.

  இவரெல்லாம் கேப்டனா? இப்படி பேசலாமா?.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பாபர் ஆஸம்! சர்ச்சை இவரெல்லாம் கேப்டனா? இப்படி பேசலாமா?.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பாபர் ஆஸம்! சர்ச்சை

  துபாய் மைதானத்தில் பெரிய சைஸ் கொண்டது. எனவே இந்த ரன்கள் ஆஸ்திரேலியாவிற்கு ரொம்பவே சவாலான இலக்குதான். ஆனால், டேவிட் வார்னர், மேத்யூ வேட், ஸ்டைனிஷ் ஆகியோரின் அதிரடி காரணமாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

  ஆஸ்திரேலியா சாதனை

  ஆஸ்திரேலியா சாதனை

  உலக கோப்பை நாக்-அவுட் ஸ்டேஜ்களில் பாகிஸ்தானிடம் இதுவரை ஆஸ்திரேலியா தோற்றதேயில்லை என்ற சாதனையை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், இந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள தகுதியான அணியாக கணிக்கப்பட்டிருந்தது பாகிஸ்தான். பாபர் அசாம், ரிஸ்வான் ஆகிய இரு துவக்க வீரர்களும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்ததும், ஷாஹின் அப்ரிடி சிறப்பாக பந்து வீசியதும் இதற்கு காரணம்.

  மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்ஸ்

  மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்ஸ்

  அதேநேரம், பாகிஸ்தான் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும், ஆஸ்திரேலியா கடந்த சில போட்டிகளாக விஸ்வரூபம் எடுத்துவிட்டது. எந்த கட்டத்திலும் தோல்வியடையாமல் வெற்றி பெற வேண்டும் என்ற ஆஸ்திரேலிய ஸ்ப்ரிட் நேற்றைய போட்டியிலும் எதிரொலித்தது. இது வெற்றிக்கு காரணமாக மாறியது. மேத்யூ வேட் அடித்த ஹாட்ரிக் சிக்சர் அதுவும், அப்ரிடி மாதிரி வேகப் பந்து வீச்சாளர் ஓவரில் அடித்த அந்த ரன்கள் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது.

  ஐசியூ சிகிச்சை

  ஐசியூ சிகிச்சை

  சரி விஷயத்திற்கு வருவோம்.. நேற்றைய போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் ஐசியூவில் 2 நாள் சிகிச்சை பெற்ற ஒரு வீரர் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, போட்டியில் வந்து ஆடியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது வேறு யாருமில்லை, பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர் ரிஸ்வான்தான்.

  முகமது ரிஸ்வான்

  முகமது ரிஸ்வான்

  இத்தனைக்கும் பாகிஸ்தானுக்காக அரையிறுதியில் அதிக ரன் எடுத்தது முகமது ரிஸ்வான்தான். 67 ரன்கள் எடுத்தார். மார்பு சளி தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், இந்த ஆட்டத்தில் பங்கேற்க டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தார். காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் மற்றும் மூத்த வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் விளையாடுவது சந்தேகம் என்று நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் இருவருமே நேற்று ஆடினார்கள். அதிலும் ரிஸ்வான் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டு உடனே ஆட்டத்தில் பங்கேற்றார்.

  அதிரடி மனநிலை

  அதிரடி மனநிலை

  "நவம்பர் 9 ஆம் தேதி முகமது ரிஸ்வான் கடுமையான மார்பு நோய்த்தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு நாட்கள் ICU வில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்," என்று பாகிஸ்தான் அணியின் மருத்துவர் நஜீப் சோம்ரூ கூறினார். "அவர் நம்பமுடியாத அளவு வேகமாக குணமடைந்தார் மற்றும் போட்டிக்கு முன் தகுதியானவராக அறிவிக்கப்பட்டார். நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற அவரது உணர்வுதான் இதற்கு காரணம். அவரது உடல்நிலை குறித்த முடிவு முழு அணி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. இது முழு அணியின் மன உறுதியைப் பற்றியது, எனவே நாங்கள் ரிஸ்வானை அணிக்குள் இருக்க சம்மதித்தோம்." என்று நஜீப் சோம்ரூ தெரிவித்துள்ளார்.

  பாபர் அசாம் பாராட்டு

  பாபர் அசாம் பாராட்டு

  நடப்பு உலக கோப்பையில் 303 ரன்களுடன் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், தனது தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் பற்றி கூறுகையில், இது ஒரு "செம" அணுகுமுறை. நிச்சயமாக அவர் ஒரு டீம்மேன். இன்று அவர் விளையாடிய விதம் செமயாக இருந்தது. நான் அவரைப் பார்த்தபோது, ​​​​அவர் கொஞ்சம் சோர்வாக இருந்தார். நான் அவரது உடல்நிலை பற்றி கேட்டபோது, ​​​​இல்லை, நான் விளையாடுவேன் என்று அவர் கூறினார். அவர் இன்று விளையாடிய விதம் அவர் ஒரு டீம் மேன் என்பதைக் காட்டுகிறது. நான் அவரது அணுகுமுறை மற்றும் செயல்திறன் மீது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இவ்வாறு பாபர் ஆசம் தெரிவித்தார்.

  English summary
  Australia vs Pakistan: Pakistan's Mohammad Rizwan despite spending two days in a hospital intensive care unit due to a chest infection.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X