துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் ஓவர்னு நினைத்த நேரத்தில் கடுப்பேற்றிய சர்துல் தாக்கூர்.. தோனிக்கு வந்த கோபம்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

துபாய்: கோப்பையை வென்று விட்டோம் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்ட பிறகு, வம்படியாக கண்டபடி பந்துகளை வீசி கேப்டன் தோனியை கடுப்பேற்றி விட்டார் சர்துல் தாக்கூர்.

Recommended Video

    Chennai Super Kings as MS Dhonis Yellow Army clinches 4th IPL title| Oneindia Tamil

    ஒரு கட்டத்தில் தோனி முகத்தில் கடும் கோபமே எதிரொலித்து விட்டது. ஒரு வழியாக ஓவரை முடித்ததும், இதை முதலிலேயே செய்திருக்கலாமே என்று ஷர்துல் தாக்கூரை பார்த்து சைகை செய்தார் தோனி.

    துபாய் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 192 ரன்களை எடுத்தது.

    சிஎஸ்கே பட்டையை கிளப்பியது எப்படி.. சீக்ரெட்டை சொன்ன தோனி.. தோல்வியை மாற்றும் 'வைர வரிகள்' சிஎஸ்கே பட்டையை கிளப்பியது எப்படி.. சீக்ரெட்டை சொன்ன தோனி.. தோல்வியை மாற்றும் 'வைர வரிகள்'

    திடீரென மாறிய ஆட்டம்

    திடீரென மாறிய ஆட்டம்

    இரண்டாவது பேட் செய்த கேகேஆர் 90 ரன்களுக்கு விக்கெட்டுகளையே இழக்காமல் அச்சுறுத்தியது. ஆனால், வழக்கம்போல அதன் மிடில் ஆர்டர் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்தது. ஆனால் 8 விக்கெட்டுகள் போன பிறகு பெர்குசன் மற்றும் சிவம் மாவி ஆகிய இரு பந்து வீச்சாளர்களும் களத்தில் நின்றபோது திடீரென போட்டி கேகேஆர் பக்கம் போவதை போல இருந்தது.

    18வது ஓவரில் திருப்பு முனை

    18வது ஓவரில் திருப்பு முனை

    18வது ஓவரை வீசிய பிராவோ ஓவரில் சிவம் மாவி, 2 சிக்சர்கள், 1 பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் வந்ததால், 145 ரன்களை குவித்திருந்தது கேகேஆர்.

    சர்துல் தாக்கூர் பவுலிங்

    சர்துல் தாக்கூர் பவுலிங்

    19வது ஓவரை சர்துல் தாக்கூர் வீச வந்தார். அவர்தான் வெங்கடேஷ் ஐயர், ராணா போன்ற அதிரடி வீரர்களை அவுட் செய்தவர். சிஎஸ்கே அணிக்காக பிரேக் கொடுத்தார். ஆனால், பவுலர்களுக்கு பந்து வீசுவதாலோ என்னவோ, அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து பவுலிங் செய்தார்.

    வைடு பந்துகள்

    வைடு பந்துகள்

    2வது பந்து ஒயிடு, 4வது பந்து நோ பாலில் பவுண்டரி, மறுபடியும் 2 வைடுகள், பிறகு 2 ரன், பிறகு சிக்சர் என வரிசையாக கொடுத்தார் சர்துல் தாக்கூர். கடைசி பந்தை சரியான லென்தில் வீசியதால் பெர்குசன் அடிக்க முடியவில்லை. பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது.

    தோனி கோபம்

    தோனி கோபம்

    சர்துல் தாக்கூர் ஒழுங்காக பந்து வீசாமல் வைடுகளாக வீசியதால் தோனி கோபமடைந்தார். கோப்பையை பெறப்போகிறோம் என்று நினைத்திருந்த நேரத்தில் திடீரென போட்டியில் இப்படி திருப்புமுனை ஏற்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. கோபம் அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது. கடைசி பந்தை ஷர்துல் தாக்கூர் வீசியபோது, "இப்படி மற்ற பந்துகளையும் வீச வேண்டியதுதானே" என்று கையில் சைகை செய்தார் தோனி. மேலும், நடந்து சென்று தாக்கூரிடம் அட்வைஸ் செய்தார். தாக்கூருமே தனது பந்து வீச்சில் திருப்தியடையாமல் முகத்தை தொங்க போட்டுக் கொண்டுதான் போனார்.

    கடைசி கட்ட பரபரப்பு

    கடைசி கட்ட பரபரப்பு

    அந்த ஓவர் முடியும்போது கொல்கத்தா 162 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது கேகேஆர். ஆனால் கடைசி ஓவரை வீசிய பிராவோ 3 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி, சிஎஸ்கே அணியையும், ரசிகர்களையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்தார்.

    English summary
    CSK vs KKR: After coming to a conclusion that CSK had won the trophy, Shardul Thakur continuously bowled wide which cause angry for Captain Dhoni.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X