• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதுதான் தோனி பவர்.. தல ருத்ரதாண்டவத்தை பார்க்க குவிந்த கூட்டம்.. புது சாதனை படைத்த டிஸ்னி+ஹாட்ஸ்டார்

Google Oneindia Tamil News

துபாய்: தல தோனி விளையாட்டை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டத்தால், டிஸ்னி+ஹாட்ஸ்டார் புது சாதனையை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் சீசன் 14ன், குவாலிபையர்-1 ஆட்டம் நேற்று முன்தினம், திங்கள்கிழமை, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி 172 ரன்களை குவித்தது.

இதையடுத்து பேட் செய்த சிஎஸ்கே ஆரம்பத்திலேயே டுப்ளசிஸ் விக்கெட்டை இழந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராபின் உத்தப்பா விளாசி தள்ளினார். வழக்கம்போல ருத்துராஜ் கெய்வார்டும் தனது ஸ்டைலிஷ் ஷாட்டுகளை வெளிப்படுத்தினார்.

பண்ண முடியாதுன்னு சொன்னாங்க.. தமிழில் உருகிய உத்தப்பா.. போட்டிக்கு முன் தோனி எடுத்த முடிவு- பின்னணி பண்ண முடியாதுன்னு சொன்னாங்க.. தமிழில் உருகிய உத்தப்பா.. போட்டிக்கு முன் தோனி எடுத்த முடிவு- பின்னணி

டென்ஷன்

டென்ஷன்

இதனால் போட்டி சிஎஸ்கே பக்கம் வந்தது. ஆனால், இந்த ஜோடிகளோடு, சர்துல் தாக்கூர், அம்பத்தி ராயுடு ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானதும் டெல்லி கை ஓங்கியது. இதனால் போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் வழக்கம்போல பிபி மாத்திரையை கையில் வைத்துக் கொண்டு மேட்ச் பார்க்க ஆரம்பித்தனர்.

  Shardul Thakur முன்கூட்டியே வந்தது ஏன்? Dhoni சொன்ன காரணம்
  ஓடிடியில் புது சாதனை

  ஓடிடியில் புது சாதனை

  18வது ஓவரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் போட்டியை பார்த்தோர் எண்ணிக்கை 6.4 மில்லியனாக உயர்ந்தது. அதாவது 64 லட்சமாக அதிகரித்தது. கேபிள், டிடிஎச் போன்றவற்றின் மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்தவர்கள் கணக்கு அல்ல இது. இணையதளத்தின் வழியாக பார்த்தோர் எண்ணிக்கை இதுவாகும். நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரே நேரத்தில் இத்தனை பேர் போட்டி பார்த்தது, அதுதான் முதல் முறையாகும்.

  தோனிக்காக சாதனை

  தோனிக்காக சாதனை

  அந்த சாதனை அடுத்த சில நிமிடங்களில் முறியடிக்கப்பட்டது. ஆம்.. கடைசி ஓவரின் முதல் பந்தில் மொயீன் அலி அவுட்டானார். 5 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டபோது தோனி, பந்துகளை எதிர்கொண்டார். மொயீன் அலி அவுட்டானதும், 70 லட்சம் பார்வையாளர்களை எட்டியது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார். ஆனால் அதுவே தோனி பேட்டிங் கிரீசுக்குள் வந்ததும் 72 லட்சமாக உயர்ந்தது.

  தோனி அடித்த பவுண்டரிகள்

  தோனி அடித்த பவுண்டரிகள்

  தோனி 3 பவுண்டரிகளை விளாசி சிஎஸ்கே அணியை வெற்றி பெறச் செய்தார். 72 லட்சம் என்பது நடப்பு சீசனின் உச்சபட்ச வியூவர்ஷிப்பாக பதிவாகியுள்ளது. தல தோனி மீண்டும் பினிஷிங் செய்து விட்டார் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். விராட் கோலி உட்பட பல பிரபலங்கள் தோனியை வாழ்த்தினர்.

  தியேட்டரிலும் தோனி

  தியேட்டரிலும் தோனி

  தமிழகத்திலும் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் கூட, செல்போனில் இந்த போட்டியைதான் பார்த்துள்ளனர். தோனி வெற்றிக்கான ரன்னை அடித்ததும் தியேட்டர் முழுக்க தோனி.. தோனி.. என்ற கோஷங்கள் எழுந்தன. இந்த வீடியோக்களும் வெளியாகியிருந்தன. இதுபோன்ற காரணங்கள்தான் தோனி இன்னிங்சை புது சாதனை படைக்கச் செய்துள்ளது. இன்னும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி எத்தனை சாதனைகளை உடைக்க காத்திருக்கிறதோ தெரியவில்லை.

  English summary
  Disney + Hotstar has set a new record with a 7.2 million viewers watching Dhoni's game while CSK vs DC match.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X